Tuesday, November 15, 2005

ரசிகன்

நிலா பெய்துகொண்டிருக்கிறது
விறகாக்குங்கள் உங்கள்
புல்லாங்குழல்களை...

6 comments:

  1. புரியவில்லை..கொஞ்சம் விளக்குங்கள்

    ReplyDelete
  2. கீதா!

    நிலவின் அழகை முழுமையாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு, புல்லாங்குழல் இசையோ... இசைப்பவனோ ஒரு பொருட்டில்லை என்பது பொருளாய் இருக்குமோ?

    ReplyDelete
  3. குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்.
    -(சரியாக வரிகள் ஞாபகமில்லை)

    குழலினிதா?
    யாழினிதா?
    பசியின் முன்னே?
    -வைரமுத்து

    ReplyDelete
  4. குறள் சரிதான்...

    ஆனால்,

    "குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
    மழலைச் சொல்கேளா தவர்"

    என்றிருக்க வேண்டும்.

    ReplyDelete
  5. Searl....this one is classical!!

    ReplyDelete