Wednesday, April 01, 2009

போதிமரம்

இரவுப் பயணத்தின்
பாதியில்,
மெல்லிய விளக்கொளியில்,
ஆழ்தூக்கம் கலைந்து,
உடை தளர்த்தி,
வீறிட்டழுத குழந்தையைப் பசியாற்றி,
புரண்டு படுத்த கணவனின்
முணுமுணுப்பு ரசித்து,
ஒருக்களித்துப்
படுத்துக்கொண்ட
பெண்ணைப் பார்த்ததும்
நிம்மதியாகத் தூங்கிப்போனேன்.
சீராக ஓடத்தொடங்கியது
இரயில்.

11 comments:

  1. நல்லா இருக்கே கவிதை ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல அவதானிப்பு

    ReplyDelete
  3. @மிஸஸ்.தேவ்
    நன்றி! வருகைக்கும், கருத்துக்கும்.

    @Vilva
    நன்றி நண்பா!

    @மண்குதிரை
    நன்றி!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. வணக்கம் தோழரே,
    ///இரவுப் பயணத்தின்
    பாதியில்,
    மெல்லிய விளக்கொளியில்,
    ஆழ்தூக்கம் கலைந்து,
    உடை தளர்த்தி,
    வீறிட்டழுத குழந்தையைப் பசியாற்றி,
    புரண்டு படுத்த கணவனின்
    முணுமுணுப்பு ரசித்து,///

    வார்த்தைகளை வசப்படுத்த தெரிந்த உமக்கு வாழ்க்கையை வசப்படுத்த தெரியாதா என்ன...
    ///ஒருக்களித்துப்
    படுத்துக்கொண்ட
    பெண்ணைப் பார்த்ததும்
    நிம்மதியாகத் தூங்கிப்போனேன்.
    சீராக ஓடத்தொடங்கியது
    இரயில். ///
    ஏதோ மறை பொருளாக ஒன்று உள்ளது என்பது என் எண்ணம்... நீங்கள் தான் சொல்ல வேண்டும்...அதுதானா என்று...

    அன்புடன்

    கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

    ReplyDelete
  5. நன்றி தோழரே!

    வாழ்க்கையை வசப்படுத்தத் தானே ஒவ்வொரு நொடியும் முயன்றுகொண்டிருக்கிறோம் ஒவ்வொருவரும்!

    கண்டிப்பாக மறைபொருள் உண்டு. நீங்கள் நினைக்கும் 'அது' எது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் நினைக்கும் 'அது'கள் சில உண்டு. நம் அடுத்தச் சந்திப்பில் நிச்சயம் இதைப்பற்றிப் பேசலாம்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  6. சில போதி மர போதனைகள் அவ்வப் பொழுதுகளில் மட்டுமே மனத்தோடு ஒட்டுகின்றன.. குழந்தையும் கணவனும் இல்லாவிடில், மனம் போதி மரத்தின் மேலே ஏறவும் சாத்தியம் உண்டல்லவா?

    உள்ளதை உள்ள படியே எழுதும் துணிவுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  7. அன்புள்ள சேரல் அவர்களுக்கு ,

    நலம் தானே ?
    என்னை மீண்டும் மீண்டும் ...மறுபடியும் மறுபடியும் ...திரும்பவும் திரும்பவும்
    வாசித்துக் கொண்டே இருக்கிறேன். "போதிமரம்" கவிதையை .
    கவிதையை வாசித்தும் சமீபத்தில் திரிச்சூர் செல்லும் போது நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது (ஏன் ? எனக்குத் தெரியவில்லை ..அநேகம்
    இரயிலாக இருக்கும் ).சென்னை ரயில் நிலையத்தில் அந்த குளிர் சாதனா
    பெட்டிக்குள் சென்றவுடனையே எரிச்சல் எனக்கு .காரணம் சிறிது தூரம் என்றால்லும் ஜன்னல் பக்கத்துக்கு இருக்கை வேண்டும் எனக்கு. அந்த கறுப்புக் கண்ணாடியை பார்த்து அலுவலகத்தில் முன்பதிவு செய்தவரை திட்டி தீர்த்து விட்டேன் . அடுத்தத் தடுப்பில் ஒரு குழந்தை , எனக்கு மணி சரியாக தெரியவில்லை , அநேகம் பன்னிரண்டுக்கு மேல் இருக்கும் .அழுகை துவங்கியது .

    ரயில் திரிச்சூர்க்கு காலை ஆறு மணிக்கு வந்தது, அதுவரை விட்டு விட்டு அழுது கொண்டே இருந்தது. நான் இந்தக் குளத்தில் "வீறிட்டழுத குழந்தையைப் பசியாற்றி" ய இடத்தில் மிதந்து விடவே தோன்றுகிறது .
    நான் இந்தப் பயனைத்தில் இங்கேயே , நின்று விடுகிறானே...

    உங்களின் "அது" , கோகுலகிருஷ்ணன் அவர்களின் "அது" , எது என்று தெரியவில்லை ..

    பிரியமுடன்,
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  8. நன்றி பிரவின்ஸ்கா!

    உங்கள் அனுபவம் குறித்தான விளக்கம், என்னை இக்கவிதை தோன்றிய சூழ்நிலைக்கு இட்டுச் செல்கிறது.

    கோகுலின் 'அது' என்னுடைய 'அது', இவற்றைப் பற்றி நம் அடுத்தச் சந்திப்பில் நிச்சயமாக பேசலாம்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  9. என்னமோ நடக்குது; மர்மமாய் இருக்குது. ஒண்ணுமே புரியல ஒலகத்திலே :)

    அனுஜன்யா

    ReplyDelete
  10. @அனுஜன்யா

    ஒரு பயணத்தின் போது ஏற்பட்ட சிறு அனுபவமும், பெரும் மனமாற்றமும் தான் நான் சொல்ல வருகிற விஷயங்கள். ஒவ்வொருவருக்குமான கேள்விகள் வித்தியாசப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் பதில் தரும் போதி மரங்களும் வித்தியாசப்படுகின்றன. எங்கே வேண்டுமானாலும் நமக்கான போதி மரம் நம் வாழ்வில் வரலாம். எனக்கானது வந்தது அந்த இரயில் பிரயாணத்தில்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete