Saturday, April 04, 2009

பின்னோட்டம்

அப்பாவிடம்
அடி வாங்காதிருந்திருந்தால்

பத்தாம் வகுப்பில்
மட்டும் நன்றாய்ப்
படித்திருந்தால்

அவளை மட்டும்
சந்திக்காதிருந்திருந்தால்

அந்த விபத்தை மட்டும்
தவிர்த்திருந்தால்

இப்படியாக
எண்ணியபடி
தூங்கிப்போன ஒரிரவின்
அற்புதமான கனவில்
பத்தாண்டுகள் பின்னோடி,
அப்பாவின் அடி தவிர்த்து,
மூச்சுத்திணறப் பாடம் படித்து,
அவளோடு முதல் பார்வை வெறுத்து,
விபத்தன்று வீட்டில் முடங்கி,
பின்
நகரத்தின் வேறோர் மூலையில்
படுத்தபடி
பட்டியலிட்டுக்கொண்டிருந்தேன்
எதை எதையோ
தவிர்த்திருக்கலாமென்று.

12 comments:

  1. தோழரே!

    ஒரு நல்ல அவதானிப்பு..

    ReplyDelete
  2. தோழரே!

    ///
    அவளை மட்டும்
    சந்திக்காதிருந்திருந்தால்

    அந்த விபத்தை மட்டும்
    தவிர்த்திருந்தால் ///

    அந்த பெண்ணை சந்திக்காது இருந்திருந்தால் அந்த விபத்தை தவிர்த்திருக்கலாமோ..

    கவிஞன்யா நீர்...

    ///
    நகரத்தின் வேறோர் மூலையில்
    படுத்தபடி
    பட்டியலிட்டுக்கொண்டிருந்தேன்
    எதை எதையோ
    தவிர்த்திருக்கலாமென்று. ///

    வாழ்க்கை எல்லோருக்கும் எதையாவது சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது... நாம் தான் அவசரகதியில் இயங்கி அசட்டையில் விட்டு விடுகிறோம்..

    உங்கள் விருப்பங்களில் என் வலைப்பதிவை சேர்த்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  3. நல்ல கவிதை சேரலாதன் :)

    ReplyDelete
  4. @gokul
    நன்றி தோழரே!

    @பிரேம்குமார்
    நன்றி நண்பரே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  5. நன்றி நண்பரே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  6. வாவ், அசத்தல் சேரல். நிறைய எழுதுங்கள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  7. நன்றி அனுஜன்யா


    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  8. அருமையான கவிதை சேரல். விகடனுக்கும் வாழ்த்துக்கள்!

    மகிழ்வுடன்
    உழவன்

    ReplyDelete
  9. beutiful சேரலாதன்!ரொம்ப நல்ல கவிதை!விகடனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ஆஹா நன்றாக இருக்கு நண்பரே ...உங்கள் கவிதையில் விழுந்துட்டன்.
    ...... இது இலங்கையின் குரல்

    ReplyDelete
  11. அசத்தல் சேரல். நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete