Friday, April 10, 2009

யாதுமாகி


மேலே பார்
என்கிறாய்

கீழே பார்
என்கிறாய்

இமைகளைப்
பட படவென
அடிக்கச் சொல்கிறாய்

தலையைச்
சொறிந்து கொள்ளச்
செய்கிறாய்

'ஐயோ!
குரங்கு தான் இப்படி
நாம சொல்றதை எல்லாம்
செய்யும்'
என்று சொல்லிக்
கைதட்டிச் சிரிக்கிறாய்

என்னைக்
குரங்காக்கி ரசிக்கிறாய்
நீ!

உன்னைக்
குழந்தையாக்கி
ரசித்துக்கொண்டிருக்கிறேன்
நான்

13 comments:

  1. சேரல், இந்த கவிதையை படித்ததும் என்ன என்னவோ சொல்ல தோன்றுகிறது.

    இப்போதைக்கு இது மட்டும் சொல்லி கொள்கிறேன்
    //என்னைக்
    குரங்காக்கி ரசிக்கிறாய்
    நீ!

    உன்னைக்
    குழந்தையாக்கி
    ரசித்துக்கொண்டிருக்கிறேன்
    நான் //

    அருமை

    ReplyDelete
  2. நல்லா இருக்கு நண்பரே

    ReplyDelete
  3. அட யாருங்க அது???
    jokes apart...நல்லாருக்கு...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  4. @பிரேம்குமார்

    நன்றி நண்பரே!
    உங்கள் தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும்.


    @மண்குதிரை
    நன்றி நண்பரே!
    உங்கள் தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும்.


    @அன்புடன் அருணா
    நன்றி! தொடர்ந்து வாருங்கள்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  5. மூன்றாம்பிறை திரைப்படம் நினைவில் வந்தது.வலிமிகுந்த கவிதை. நல்லாயிருக்குது.

    ReplyDelete
  6. வாவ்..! கலக்கலோ கலக்கல்..!
    வார்த்தை மட்டுமல்ல... பொருளிலும்..!

    ReplyDelete
  7. தோழரே..

    யதார்த்தமாக இருக்கிறது கவிதை...

    குறிப்பு:-
    என்ன இது.நீங்களுமா...

    ReplyDelete
  8. 'ஐயோ!
    குரங்கு தான் இப்படி
    நாம சொல்றதை எல்லாம்
    செய்யும்'
    என்று சொல்லிக்
    கைதட்டிச் சிரிக்கிறாய்

    இதில் உள்ள "நாம" இருவருக்குமான நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவே
    உணர்கிறேன்.

    கைதட்டிச் சிரிப்பது குழந்தை தன்மை தானே? இங்கேயே குழந்தையை அழைத்து
    வந்து வீட்டீர்கள்.



    என்னைக்
    குரங்காக்கி ரசிக்கிறாய்


    உன்னைக்
    குழந்தையாக்கி
    ரசித்துக்கொண்டிருக்கிறேன்

    கவிதையை நான் ரசித்துக்கொண்டிருக்கிறேன்

    நன்றாக இருக்கிறது கவிதை.

    ReplyDelete
  9. உன்னைக்
    குழந்தையாக்கி
    ரசித்துக்கொண்டிருக்கிறேன்
    நான்

    ரசனை நல்லாருக்கு,
    கவிதை நன்று.

    ReplyDelete
  10. @ச.முத்துவேல்

    நன்றி நண்பரே!
    பொருத்தமான இன்னொரு படிமத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்.

    @Vilva

    நன்றி நண்பா!
    உன் வருகைக்கும், எனக்களிக்கும் ஊக்கத்துக்கும்.

    @கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

    நன்றி தோழரே!
    'நானும்' இல்லை. கருப்பும் வெள்ளையும் கலந்து கிடக்கும் அழகான வர்ணசாலை இது தலைவரே!

    பின்குறிப்பு:
    இது என் மிகுந்த அன்பிற்குப் பாத்திரமான தோழி ஒருவரின் மேல் நான் எழுதியது. அவ்வளவே! வேறு உணர்வுகள் ஏதும் இல்லை :)

    @பிரவின்ஸ்கா

    நன்றி நண்பரே!
    கவிதையை நுட்பமாய் ரசிப்பதற்கும் ஒரு திறமை வேண்டும். அது உங்களிடம் நிறையவே இருப்பதாய் உணர்கிறேன். வாழ்த்துகள்!

    @ஆ.முத்துராமலிங்கம்

    நன்றி நண்பரே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  11. நம்மையெல்லாம் குரங்காய் நாயாய் மாற்றிப் பார்ப்பதே இவர்கள் வேலை, நமக்கு குழந்தை மனசு, அதனால் இவர்களை குழந்தையாய் பார்க்கிறோம்,ரசிககிறோம்.

    நல்லா எழுதியிருக்கீங்க

    ReplyDelete
  12. @yathra
    நன்றி நண்பரே!

    குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். குழந்தைகளுக்காக யாதுமாகி நிற்பதில் மகிழ்ச்சி கொள்கிறது மனது :)

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  13. நல்லா இருக்கு. நல்லா எழுதறீங்க சேரல். தொடருங்கள்.

    அனுஜன்யா

    ReplyDelete