Thursday, April 23, 2009

நன்றி!

உயிரின் மூலம் வரைச்
சுட்டெரித்து தகிக்கிறது
வெயில்

சலனமற்றிருக்கும்
மரத்தில்
ஒளிந்து மறுபடியும்
நடக்கிறேன்

இன்னும் வெயிலிலேயே
தனிமையில்
உழன்றுகொண்டிருக்கிறது
நான் இளைப்பாறி,
அழுந்த மிதித்தும்
சன்னமாய்க் கிடந்த
நீண்ட மரநிழல்.

12 comments:

  1. //இன்னும் வெயிலிலேயே
    தனிமையில்
    உழன்றுகொண்டிருக்கிறது
    நான் இளைப்பாறி,
    அழுந்த மிதித்தும்
    சன்னமாய்க் கிடந்த
    நீண்ட மரநிழல்.//

    வரிகள் ஏதோ சொல்லுகின்றதே!
    கவிதை ரொம்ப நல்லாருக்கங்க சேரல்.

    ReplyDelete
  2. கொடைக்கு மரத்தை போல வேறொரு எடுத்துக்காட்டு இருப்பது சிரமம் தான். நல்ல கவிதை சேரல்

    ReplyDelete
  3. ஒரு கோடை நாளின் நண்பகல் வெக்கை போல , தனிமையை உணர்த்துவது வேறெதுவும் இல்லை ன்னு எஸ் ரா எழுத்தில படிச்சதா ஞாபகம் ...

    அழுத்தமான கவிதை ண்ணா :-)

    இணைய இணைப்பு கொடுத்தாச்சே :-)

    ReplyDelete
  4. நன்றி நண்பர்களே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  5. பிரமாதமாக இருக்கிறது கவிதை.

    உயிரோசையில் தங்களின்
    "இருளில் நடப்பவனின் நிழல்" சிறுகதையைப் படித்தேன்.
    அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  6. கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  7. @பிரவின்ஸ்கா, @ yathra

    நன்றி நண்பர்களே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  8. சேரல்,

    இந்தக் கவிதையும் பிடித்திருக்கிறது. நல்லா எழுதுறீங்க. தமிழ்நதி கூட வெய்யில் பத்தி சிலமாதங்கள் முன் ஒரு கவிதை எழுதி இருந்தார். நேரம் இருந்தால் படியுங்கள். நல்லா இருக்கும். நிறைய படியுங்கள். நிறைய எழுதுங்கள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  9. இந்தக் கவிதை பிடித்திருக்கிறது (ஆனால் இதிலும் கொஞ்சம் சிக்கனம் கடைபிடித்திருக்கலாமோ... கவிதையில் சிக்கனம் முக்கியமான விஷயமில்லையா!)

    ReplyDelete
  10. நன்றி அனுஜன்யா!

    உங்கள் கருத்துகள் கண்டிப்பாக ஊக்கம் அளிக்கின்றன. படிக்க அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.

    @ஜ்யோவ்ராம் சுந்தர்
    நன்றி நண்பரே!
    சொற்சிக்கனம்!? அதே பதில்தான். முயற்சி செய்கிறேன்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete