Wednesday, April 29, 2009

நினைவோடு அலை

அலையாடிய குழந்தைகளை
கரையில்
மணல்வீடு கட்ட அனுப்பிவிட்டு
கை கோர்த்துக்
கடலாடுகின்றனர் இரு தாய்மார்

அவர்கள்
முகத்தலடித்துத் தெறித்து
வழிந்தோடுகிறது,
அவர்களின்
பிள்ளைப்பிராயத்து
அலையொன்று

9 comments:

  1. அருமையான கவிதை,
    படித்ததும் பிடித்தது.
    அழகா இருக்குங்க

    ReplyDelete
  2. சேரல், கவிதை அழகு!

    //இரு தாய்மார்// இது வெறும் தாய்மார்கள் என்றிருந்திருக்கலாம்

    //அவர்களின்
    பிள்ளைப்பிராயத்து
    அலையொன்று //
    வெகு அழகு சேரல் :)

    ReplyDelete
  3. @ஆ.முத்துராமலிங்கம்
    நன்றி நண்பரே!

    @பிரேம்குமார்
    நன்றி நண்பரே! நீங்கள் சொல்வது போல் இருந்தால் அழகாகவே இருக்கும். இங்கே என் நண்பன் ஒருவன் எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.

    'பிறந்த குழந்தை
    அழகாகவே இருந்தது
    சாயல் மட்டும் வேறாக,
    திருத்தப்பட்ட என் கவிதை'

    குழந்தை என் சாயலிலேயே இருந்து விடட்டுமே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. //பிள்ளைப்பிராயத்து
    அலையொன்று//

    நல்ல பதம் சேரல்.

    ReplyDelete
  5. கடைசி வரிகள் அருமை. நல்லா இருக்கு சேரல்.

    அனுஜன்யா

    ReplyDelete
  6. நல்லா இருக்குங்க கவிதை.

    இன்னும் கொஞ்சம் சொற்சிக்கனம் இருக்கலாமோ?

    ReplyDelete
  7. @மண்குதிரை
    நன்றி நண்பரே!

    @அனுஜன்யா
    நன்றி நண்பரே! வெகு நாட்களுக்குப் பிறகு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    @ஜ்யோவ்ராம் சுந்தர்
    நன்றி நண்பரே!
    சொற்சிக்கனம்!? தெரியவில்லை. இனி முயற்சி செய்கிறேன்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  8. அன்பு சேரல், அருமையா இருக்கு கவிதை, தன் குழந்தைகளை மணல்வீடு கட்டவிட்டு பிள்ளைபிராயத்துக்குச் செல்லும் தாய்மார், அருமை சேரல்.

    ReplyDelete
  9. நன்றி யாத்ரா!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete