Thursday, April 30, 2009

இன்னும் ஓர் இரவு

ஜீன்ஸ் அணிந்தபடி
மறுநாள் விடியலுக்குக்
கோலமிடுகிறாள்
ஒரு
பதின் வயதுப் பெண்

தெருமுனைக் கடைகளில்
தேநீர் பருகுகிறார்கள்
சிகரெட் இழுக்கும்
இளைஞர்கள்

வீட்டின்
முன் விளக்குகள்
அணைவதை
அசுவாரஸ்யமாய்த்
தலை தூக்கிப் பார்த்து
மீண்டும் தூங்கிவிடுகின்றன
தெருநாய்கள்

குப்பை வண்டியின்
நிழலுக்கருகிருக்கும்
நடைமேடையில்
பார்சல் பிரியாணி
சாப்பிடுகிறார்கள்
துப்புரவு தொழிலாளர்கள்

அதீதமான
அலங்காரங்களுடன்
பெண்பாலரும்
பால் திரிந்தோரும்
நடக்கும் சுரங்கப்பாதையில்
சீறிப்பாய்ந்து நிற்கிறதொரு
நான்கு சக்கர வாகனம்

தூங்கிக் கொண்டிருந்தவளை
உதைத்துத் தள்ளிவிட்டு
துண்டு விரித்துப்
படுக்கிறான்
பிளாட்பார வாசியொருவன்

மீறியெழும்
தூக்கத்தைப்
புறந்தள்ளி
ஒப்பனைகளுடன்
இரவு பணிக்குத்
தயாராகிறார்கள்
சில
ஆண்களும்
பெண்களும்

இன்னுமோர்
இரவுக்குத்
தயாராகிவிட்டிருக்கிறது
மாநகரம்

10 comments:

  1. இரவின் அவதானிப்பு கவிதையெங்கும், நல்லா இருக்கு சேரல்.

    ReplyDelete
  2. சென்னையை ஒரு சுற்று சுற்றியது போல் இருந்தது. சுற்றி காட்டியதற்கு நன்றி சேரல் :-)

    ReplyDelete
  3. வார்த்தை பயன்பாடு அருமை..!

    ReplyDelete
  4. @yathra, @பிரேம்குமார், @Vilva

    நன்றி நண்பர்களே!

    தொடர்ந்து வாருங்கள்

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  5. 'மா நகரம்'
    என்று படிக்கும் பொழுது இன்னும்
    அழகாய் இருந்தது கவிதை

    ReplyDelete
  6. அழகான கவிதை.
    இரவின் படிமங்கள்
    எழுத்திலும் விழுந்து கிடக்கின்றது.
    அருமை.

    ReplyDelete
  7. ரொம்ப நல்லா இருக்கு சேரல்.

    ReplyDelete
  8. @இலக்குவண், @ஆ.முத்துராமலிங்கம், @மண்குதிரை,

    நன்றி நண்பர்களே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  9. நல்லா இருக்கு சேரல்.

    அனுஜன்யா

    ReplyDelete
  10. நன்றி அனுஜன்யா!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete