Saturday, April 04, 2009

மிதந்து போகும் புன்னகை

அந்தக்
குறுகிய சாலையின்
மறுமுனையினின்றும்
புன்னகைக்கும்
அவள்,
பரிச்சயமற்றவர்களைப் பார்த்தும்
புன்னகைக்கும்
உன்னை நினைவு படுத்தினாள்.
நினைத்துக்கொண்டேன்.
உன்
புன்னகையில்
குழம்பியவர்களுக்கு
யார் யாரை
நினைவுபடுத்தினாயோ
நீ!

9 comments:

  1. ungkaludaiya paarvai viththiyasamaana unarvaiththarukiRathu.

    vaazhththukkal nanbaree.

    ReplyDelete
  2. நன்றி நண்பரே!

    தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  3. மனசு ஜில்லுனு, நல்லா இருக்குங்க கவிதை

    ReplyDelete
  4. நன்றி நண்பரே!

    உங்கள் வருகையை மீண்டும் எதிர்பார்க்கிறேன்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  5. //உன்
    புன்னகையில்
    குழம்பியவர்களுக்கு
    யார் யாரை
    நினைவுபடுத்தினாயோ
    நீ! //

    அருமை :)

    ReplyDelete
  6. //நினைத்துக்கொண்டேன்.//

    இந்த வரியை எடுத்துவிட்டால் கவிதை இன்னும் அழகுறுமே :)

    ReplyDelete
  7. @பிரேம்குமார்

    நன்றி நண்பரே!

    நீங்கள் சொன்ன பின் யோசிக்கிறேன். அழகாகத்தான் இருக்கிறது. ஆனால், தன் இயல்போடு இருப்பதுதான் யதார்த்தமான கவிதை என்பது என் எண்ணம். தோன்றியது எப்படியோ அப்படியே இருக்கட்டுமே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  8. :) - நல்லா இருக்கு

    அனுஜன்யா

    ReplyDelete
  9. @அனுஜன்யா

    நன்றி!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete