Monday, May 04, 2009

ஒரு கொலை

மலைமுகட்டிலிருந்து
விழுகிறேன் நான்

மீண்டுமொருமுறை
பரிசீலனை
செய்திருக்கலாமோ?

இல்லை.
அறிந்த பின்தான்
அடங்கும்
தீராத தேடல்

அழிதலை
அறிதலும்,
உணர்தலும்
வேண்டுமெனக்கு

மேகங்களின்
பரப்பைக்
கிழித்தபடி
கீழிறங்குகிறேன்

எடையேதுமற்ற
பறவையாக உணர்கிறேன்
ஒரு கணம்

விழுந்த பிறகான
நிகழ்வுகள் பற்றிய
கவலைகள் எதுவுமற்ற
விடுதலையுணர்வு
தேகமெங்கும்
பரவுகிறது

சுகமான
தாளத்தை இசைத்தபடி
தரையில் மோதிச் சிதறுகிறேன்

வாழ்வின் பூரணம்
உணர்ந்துவிட்டதாய்
விம்மிச் சரிகிறது
உடல்

இன்னுமொரு பாதி
நிறையாமலே
சிதைந்துபோனது
வாழ்வின் கோப்பை

16 comments:

  1. அருமையான கொலை செய்ததற்கு வாழ்த்துக்கள்..!
    :)

    ReplyDelete
  2. மிக அருமை, கவிதை மிகவும் பிடித்திருக்கு.

    ReplyDelete
  3. @முனைவர்.இரா.குணசீலன்
    நன்றி நண்பரே!
    தொடர்ந்து வாருங்கள்.

    நன்றி டக்ளஸ்,
    //அருமையான கொலை செய்ததற்கு வாழ்த்துக்கள்..! :)//
    கவிதை எழுதியதைச் சொல்கிறீர்களா? :)

    @ஆ.முத்துராமலிங்கம்
    நன்றி நண்பரே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. //இன்னுமொரு பாதி
    நிறையாமலே
    சிதைந்துபோனது
    வாழ்வின் கோப்பை//

    என்னடா, கவிதை இப்படியொரு கொலைவெறியோடு போய் கொண்டிருக்கிறதே என எண்ணிக்கொண்டிருந்தேன். கடைசி வரிகள் ஆறுதல் அளித்துவிட்டன

    வாழ்த்துகள் சேரல்

    ReplyDelete
  5. //மலைமுகட்டிலிருந்து
    விழுகிறேன் நான் //

    கவிதையின் தலைப்பில் பொருள் குற்றம் கண்டேன்.

    ReplyDelete
  6. நன்றி பிரேம்

    @ஜ்யோவ்ராம் சுந்தர்
    நன்றி நண்பரே!

    @ராஜ நடராஜன்
    வருகைக்கு நன்றி நண்பரே!
    பொருள்குற்றம் எதுவுல் இல்லை. கவிதையின் உட்பொருளைப் புரிந்து கொண்டால் உண்மை தெரியும் :)

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  7. nalla irukku cheral

    mankuthiray

    ReplyDelete
  8. ஏனிந்த (தற்)கொலை வெறி :)

    நல்லா இருக்கு சேரல்.

    அனுஜன்யா

    ReplyDelete
  9. //பொருள்குற்றம் எதுவுல் இல்லை. கவிதையின் உட்பொருளைப் புரிந்து கொண்டால் உண்மை தெரியும் :)//

    மலையருவியோ? அப்பவும் தலைப்பு பொருந்த மாட்டேங்குதே.இல்ல.இல்ல பொருள் குற்றம்தான்.சொல்லாத வரைக்கும் குற்றம் குற்றமே.

    ReplyDelete
  10. அட....இது நல்லா இருக்கே!

    சரி. இது தற்கொலைதான். ஆனால் இதுவும் ஒரு கொலையே!

    இன்னொரு பாதியைக் கொன்றுவிட்ட வாழ்வின் ஒரு பாதி.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  11. நன்றி மண்குதிரை!

    நன்றி அனுஜன்யா!
    வெறி இல்லை. ஆனாலும் ஒரு தூண்டுதல். அவ்வளவே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  12. கவிதை அருமையாக இருக்கிறது .

    ReplyDelete
  13. நல்லா இருக்கு சேரல் கவிதை, தற்கொலையும் ஈர்ப்புக்குரிய விஷயமே, அதுவும் ஒரு பரவச போதை.

    ReplyDelete
  14. நன்றி பிரவின்ஸ்கா

    நன்றி யாத்ரா

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete