Tuesday, May 05, 2009

வலி

சந்தையெங்கும்
வாசம் பரப்பி
குவிந்து கிடக்கும்
மல்லிகைப் பூக்களுக்குள்
காணாமல் போகிறது
ஒவ்வொரு பூவாகப்
பறித்துச் சேர்த்தவளின்
விரல் வலி

10 comments:

  1. சேரல், ஏதோ ஒன்று இன்னும் அந்த வலியை உணர்த்தாமல் உள்ளது.

    இதைப் பாருங்கள்,

    எடைபோட்டு விற்கிற
    சந்தையில்
    தனிப் பூவின்
    அழகு செல்லுபடியாவதில்லை
    -யுகபாரதி

    இதை படிமாகக் கொள்ளலாம் அதே பொருளுக்கு.

    முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  2. வலி எங்கும் போகவில்லை
    வந்த காசில் நிரவியுள்ளது.

    ReplyDelete
  3. நன்றி நண்பர்களே!

    வருகைக்கும், கருத்துக்கும்

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  5. நல்லா இருக்குங்க

    ReplyDelete
  6. நன்றி தமிழ்ப்பறவை!

    உங்கள் பெயர் நன்றாக இருக்கிறது :)

    @ஆ.முத்துராமலிங்கம்

    நன்றி நண்பரே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  7. நன்றாக இருக்கிறது கவிதை .

    ReplyDelete
  8. கவிதை நல்லா இருக்கு சேரல்

    ReplyDelete
  9. நன்றி பிரவின்ஸ்கா!

    நன்றி யாத்ரா!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete