Sunday, May 10, 2009

செவிடு

பார்வையாளர் மிகுந்திராத
திரைப்படத்தின்
இரு காட்சிகளுக்கிடையே
நிகழ்த்தப்படும்
மௌனத்தின் அழுத்தம்
தாங்காமல்
வெளிச்சென்று,
புகையிழுத்து
வந்தமரும் அவனுக்கு
எப்போதும் கேட்பதில்லை
மௌனம் எழுப்பும்
இசையின் அதிர்வுகள்

7 comments:

  1. நல்லா இருக்குங்க கவிதை,

    |புகையிழுத்து
    வந்தமரும் அவனுக்கு
    எப்போதும் கேட்பதில்லை|

    இவ்வரிகள் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  2. அருமையாக இருக்கிறது கவிதை .

    ReplyDelete
  3. @ச.பிரேம்குமார்,@தமிழ்ப்பறவை,@மண்குதிரை,@ஆ.முத்துராமலிங்கம்,@பிரவின்ஸ்கா

    நன்றி நண்பர்களே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. \\மௌனம் எழுப்பும்
    இசையின் அதிர்வுகள்\\

    ரொம்ப நல்லா இருக்கு சேரல்.

    ReplyDelete
  5. நன்றி யாத்ரா

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete