Thursday, May 21, 2009

தப்பிப் பிழைத்தவர்கள்

பசித்திருக்கிறார்கள்

தனித்திருக்கிறார்கள்

விழித்திருக்கிறார்கள்

நான்
கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்

9 comments:

  1. நல்லா இருக்குங்க.
    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  2. நன்றி பிரவின்ஸ்கா. ஆனால் தயவுசெய்து இனிமேல் யாரும் இக்கவிதையை நன்றாக இருக்கிறதென்று சொல்லாதீர்கள். என்னை நினைத்து எனக்கே கேவலமாக இருக்கிறதென்று எழுதி இருக்கிறேன். உங்கள் உள்ளத்தில் என்ன தோன்றுகிறதோ அதை மட்டும் கூறிப்போங்கள். வன்மையாக இருந்தால் மன்னிக்க.

    -சேரல்

    ReplyDelete
  3. super ... பிரவின்ஸ்கா சொன்னதற்கான உங்கள் பதிலைப் படித்துவிட்டும் தான் இப்படிச் சொல்கிறேன் ... ஏன் என்று காரணம் சொல்லியே தீர வேண்டுமெனில் சொல்லுங்கள் ... சொல்கிறேன் ...

    ReplyDelete
  4. அன்பின் சேரல்,

    // ஆனால் தயவுசெய்து இனிமேல் யாரும் இக்கவிதையை நன்றாக இருக்கிறதென்று சொல்லாதீர்கள் //

    இதை தாங்கள் மட்டும் எப்படி தீர்மானிக்கமுடியும் என்று நினைகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.


    குறிப்பு : வழக்கமாக தங்களின் ப்ரியமுடன் பின்னுட்டதில் இருக்கும்
    " ப்ரியமுடன் " என்ற வார்த்தையை காணவில்லை.
    அது தான் ஏனோ கவலையாக இருக்கிறது.

    வன்மை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. இருந்தால் தான் என்ன ?

    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  5. நீங்க வேற...

    இம்சை காலம் என்றொரு காலம் இருக்கிறது சார்.. அதிலிருந்து நான் மீண்டுவிட்டேன். அப்பொழுது (அக்காலத்தில்) நெருங்கியவரின் மரணத்திற்குச் செல்லும் பொழுது அந்த அசைவற்ற உடலைக் கண்டதும் மனதுக்குள் கவிதை எழுதிவைத்தேன்.... (அட,,, இப்படியே கவிதையாக்கிடலாம் போல இருக்கே..) நான் வெட்கப்படவேண்டிய விஷயம்...

    அந்த நெருங்கியவர் என் அண்ணன்.

    விடுங்க.. நீங்களாச்சும் கவிதை எழுதறீங்க. எழுதத் தெரியாதவங்க கதியை யோசிச்சுப்பாருங்க!!!

    வழக்கம்போல கவிதை அருமை.. (ஓ! சாரி.)

    ReplyDelete
  6. வணக்கம் தோழரே,

    அவர்கள்
    பசித்திருக்கார்...
    தனித்திருக்கார்...
    விழித்திருக்கார்...
    அப்பொழுதும் கவிதை எழுதிக் கொண்டிருப்பீர் நீவீர்.

    உங்கள் மீதான நீங்கள் ஏற்படுத்தாத எந்த நம்பிக்கையும் எனக்கு குறையவில்லை...



    வெற்றிடங்களில் நான் உங்களிடம் என்ன பேசியிருப்பேன் என்று எழுதி நிரப்பிக்கொள்ளுங்கள்.

    அன்புடன்

    கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

    ReplyDelete
  7. பிரியத்துக்குரிய பிரவின்ஸ்கா,

    நான் மட்டும் தீர்மானிக்கக் கூடிய விஷயமல்ல அது; படிப்பவரின் எண்ண ஓட்டத்தில் தோன்றுவது. அப்படிச் சொல்ல வேண்டாமென்பது என் வேண்டுகோள். அவ்வளவே.

    'ப்ரியமுடன்' தவறியது ஏதோ ஓர் உணர்ச்சி வேகத்தில்தான். இம்முறை தவறாது. பிரியமும் குறையாது :)

    வன்மை இருந்தால்தான் என்ன? அதுவும் சரிதானே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  8. @Nundhaa,@ஆதவா,@கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

    கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி தோழர்களே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  9. துயரப் பூச்சு கொண்ட கவிதைகள் ஏதோ ஒரு வகையில் எல்லாருக்கும் பிடித்தமானது என்பதைத் தாண்டி ஒரு வடிகாலாக இருக்கிறது .அதன் சாயல் கொஞ்சமேனும் எல்லார் மேலும் படிந்திருப்பதால் ...

    வரப்போகும் ஒரு நாளில் (மிக சீக்கிரம்) வானத்தின் உயரிய அடுக்கில் இருந்து நீங்கள் திரும்பிப் பார்க்கையில் , நான் இருக்கும் இடத்தில் சில காலங்கள் நீயும் இருந்திருக்கிறாய் என சொல்வதற்கு இந்தக் கவிதை இருக்கக் கூடும் .கவிதை மட்டும்.

    வேறென்ன சொல்ல .. தங்களது முயற்சிகளுக்கு வாழ்த்துகள் :-)

    ReplyDelete