Saturday, May 23, 2009

புதையல்

புதையல் தேடிய கணங்களில்
இருந்தது புதையல்

கண்டெடுத்த பின்
தொலைந்து போனது

தொலைத்த பின்
மீண்டும் கிடைக்கலாம்

14 comments:

  1. உங்களின் தொடர்ந்த வாசகர்களை, கொஞ்சம் கொஞ்சமாக உங்களின் பாணிக்கு பக்குவப்படுத்திவிட்டீர்கள் சேரா.. :)

    ReplyDelete
  2. கொஞ்சம் அதிகம் சொல்லியிருக்கலாமோன்னு தோணுது...

    நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  3. நன்றி பாலா!
    தொடர்ந்த வாசகர்களா? சரி :)

    நன்றி ஆதவா!
    நான் சொல்ல நினைத்ததை இந்த வார்த்தைகள் அப்படியே உள்வாங்கி வெளிப்படுத்தி இருப்பதாய் நினைக்கிறேன். என் உணர்வு உங்களுக்கும் ஏற்பட்டிருக்குமாயின் மகிழ்ச்சியே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. தந்தை. கழனியுரனோடு கவிதையை வாசித்தேன்.
    நன்றாக இருப்பதாக சொன்னார்.

    நல்லா இருக்கிறது.

    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  5. நல்லா இருக்கு கவிதை.

    ReplyDelete
  6. இதை நானும் பல முறை உணர்ந்திருக்கிறேன் சேரல். தேடும் பொது இருக்கும் அந்த ஆவலும் ஆசையும் தேடியது கிடைத்தும் இருப்பது இல்லை

    ReplyDelete
  7. ஏதோ puzzle
    விடை கண்டு பிடிச்ச சந்தோசம்
    இந்த கவிதை அர்த்ததை ரசித்தது
    எப்புடி இந்த மாறி யோசிக்க முடியுது

    ReplyDelete
  8. தொலைவதும்

    கிடைப்பதும்

    இயல்பில் இருப்பதே! ...

    ReplyDelete
  9. நல்லா இருக்கு சேரல்...

    ReplyDelete
  10. வழக்கம் போல அருமையாயிருக்கிறது கவிதை :-)

    // புதையல் தேடிய கணங்களில்
    இருந்தது புதையல் //

    முதல் புதையல் கண்டிப்பாகத் தேவையா ??

    ReplyDelete
  11. நல்லா இருக்கு சேரல். ஒரு எளிய நடையை வசப்படுத்திவிட்டேர்கள்.

    ReplyDelete
  12. பொதுவாக கவிதைகளில் போதனைகள் என்னைக் கவராது ஆனாலும் உங்கள் நடை கவர்கிறது

    ReplyDelete
  13. @பரத்
    நன்றி!

    நன்றி பிரவின்ஸ்கா!
    உங்களுக்கும், தந்தைக்கும்.

    @ஆ.முத்துராமலிங்கம்
    நன்றி!

    உண்மைதான் பிரேம்! நன்றி!

    @Abbasin Kirukkalkal
    அப்படியா? நன்றி!
    புரிந்து கொண்டீர்கள் அல்லவா? மகிழ்ச்சி!

    @நட்புடன் ஜமால்
    நன்றி!

    @தமிழ்ப்பறவை
    நன்றி!

    @ரெஜோ
    நன்றி தம்பி!
    முதல் புதையல் இருந்தால் இன்னும் அழகாக இருப்பதாகத்தோன்றியது :)

    நன்றி மண்குதிரை!

    @Nundhaa
    நன்றி!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete