Monday, May 25, 2009

பிறந்த நாள்

குப்புறப் படுக்க வைத்து
கவிதை நூல்களை மேலேற்றி
அழகு பார்க்கிறார்கள் நண்பர்கள்

காலை வாகன வீச்சுகளில்
தப்பித்து
கவிதையாய் வந்து வாழ்த்திப்
போகிறாள் தோழி

ஏதோ சந்துகளில்
நடந்துகொண்டு
எவனையோ பார்த்தவுடன்
என் நினைவு வந்தவனாய்
அலை பேசியில் அழைக்கிறான்
நண்பன்

கடந்த காலப்
பற்று வரவு கணக்குகள்
தீர்க்கக் கடமைக்காய்
வாழ்த்துகிறார்கள் சிலர்

முடிவில்லாத வெற்றுப்பரப்பின்
இறுதியைத் தேடிய பயணத்தில்
இன்னொரு நாளாய்க்
கடந்து போனது
இன்னொரு பிறந்த நாள்

17 comments:

  1. வாழ்த்துக்கள் (பிறந்தநாளெனில்) இல்லையேல் கவிதைக்கு...

    ReplyDelete
  2. அன்பு சேரல், மிக நல்ல கவிதை, மிகவும் ரசித்தேன், இன்றா உங்கள் பிறந்த நாள், அப்படியிருப்பின், என் பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. machi, pinnittaba. By the way, Happy birthday.

    ReplyDelete
  4. //கடந்த காலப்
    பற்று வரவு கணக்குகள்
    தீர்க்கக் கடமைக்காய்
    வாழ்த்துகிறார்கள் சிலர்//

    மன கணக்குகள் நிலுவையில் இருக்கும் வரை கடமைக்காக வேணும் வாழ்த்துகின்ற கட்டாயத்தில் சிலர்

    //முடிவில்லாத வெற்றுப்பரப்பின்
    இறுதியைத் தேடிய பயணத்தில்
    இன்னொரு நாளாய்க்
    கடந்து போனது
    இன்னொரு பிறந்த நாள் //

    கணக்குகள் எல்லாம் சமன் செய்யப்பட்டால் பயணம் முடிவுக்கு வரும்..

    ReplyDelete
  5. நன்றி தமிழ்ப்பறவை! கடந்து போன நேற்றைய நாள் என் பிறந்த நாள். அதற்கான வாழ்த்தாகவே அமையட்டும் உங்கள் வாழ்த்து :)

    @Dharini
    :)

    மிக்க நன்றி யாத்ரா!

    @Ramprabu
    நன்றி நண்பா!

    @சுபஸ்ரீ இராகவன்
    நன்றி!
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  6. கடைசிவரிகளில் யதார்த்தம் கூடுகின்றது. நல்லா இருக்கு கவிதை.

    ReplyDelete
  7. ரொம்ப அருமையா இருக்குங்க.. வாழ்த்துக்கள்... பிறந்த நாளுக்கு....

    பிறந்த நாள் கவிதையை வாழ்த்துக் கவியாக சுயபுராணம் பாடாமல் வித்தியாசமாய்....

    ReplyDelete
  8. நன்றி நண்பர்களே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  9. வாழ்த்துகள் நண்பரே
    உங்களுக்கும் கவிதைக்கும்

    ReplyDelete
  10. @திகழ்மிளிர்
    மிக்க நன்றி!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  11. சேரல் ரொம்ப நல்லா இருக்கு. என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  12. காலத்தைப் பிடிச்சு வக்க முடியாது. போயிக்கிட்டேதானிருக்கும். அந்த ஒரு நாள் நம்முடைய பிறந்த நாள் என்று தெரிந்துவிட்ட பிறகு, எவ்வளவு காட்டிக்கொள்ளவில்லையென்றாலும், லேசில் கடந்துபோக முடியது.(இதுதான் பின் நவீனத்துவ பின்னூட்டமா!)

    ReplyDelete
  13. பிறந்த நாள் வாழ்த்துகள் சேரல் :-)

    ReplyDelete
  14. நல்லா இருக்கு. பிறந்தநாள் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  15. நான் உங்கள வாழ்த்தினா
    என்ன எந்த வகைல சேத்துப்பீங்கனு
    யோசிக்குறேன்...
    இருந்தாலும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. நன்றி மண்குதிரை!

    @ச.முத்துவேல்
    அட. இது நல்லா இருக்கே!

    நன்றி பிரேம்!

    நன்றி பிரவின்ஸ்கா!

    @Abbasin Kirukkalkal
    நன்றி! நண்பர் என்ற வகைல சேத்துக்கலாம். வாழ்த்துறதுக்கு என்னங்க வேண்டி இருக்கு?

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete