கைகளை இருபுறம் விரித்துப்
பறவையென்றாகிறாள்
இரு புறமும் பின்னோடி மறையும்
காட்சிகள்
அவள் விளையாட்டுலகின்
பிம்பங்களாகின்றன
கலைந்து பறக்கும்
கேசத்தின் இழைகளை
ஒரு தேவதையின் விரல்கள் கொண்டு
ஒதுக்கி விடுகிறாள்
இரவை ஆக்கிரமித்திருக்கும்
ஒளி விளக்குகள்
அவள் பிடிக்கத்துடிக்கும்
நட்சத்திரங்களாகின்றன
கூடும் வேகம்
அவள் கீச்சுக்குரலுக்கு
ஒத்த சுதியில் இசைக்கிறது
பயணம் முடிந்தும்
பயணித்துக் கொண்டே இருக்கிறாள்
பார்த்து வந்த பாதைகளில்
இனி அவள் வாழ்க்கையில்
வரப்போகும் ஒவ்வொருவரிடமும்
சொல்ல ஒரு கதை இருக்கும்
அவளிடம்
முதல்முதலா
எங்கப்பா கூட பைக்ல
போகும்போது......
சேரல்,
ReplyDeleteமிகவும் அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
பிரம்மாதமான கவிதை இது ... மிகவும் ரசித்தேன் ... this is highly aesthetic ... I just love it ...
ReplyDeleteஅருமை சேரல்
ReplyDeleteread and rode your lines!!
ReplyDelete//கலைந்து பறக்கும்
ReplyDeleteகேசத்தின் இழைகளை
ஒரு தேவதையின் விரல்கள் கொண்டு
ஒதுக்கி விடுகிறாள் //
அருமை .
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
அழகு சேரல்...
ReplyDeleteவெகு அழகான கவிதை சேரல்.
ReplyDeleteஅருமை
அருமை சேரல்.
ReplyDeleteஅனுபவிச்சு ரசிச்சி ருசிச்சி எழுதியிருக்கீங்க. நல்லா வந்திருக்கு.
ReplyDeleteஅகநாழிகை
ReplyDeleteNundhaa
gowripriya
kartin
பிரவின்ஸ்கா
தமிழ்ப்பறவை
ஆ.முத்துராமலிங்கம்
yathra
ச.முத்துவேல்
மிக்க நன்றி நண்பர்களே!
-ப்ரியமுடன்
சேரல்
தலைப்பு எடுக்குறதுல உங்கள மிஞ்ச ஆள் இல்ல மச்சோ!
ReplyDeleteநல்லாருக்கு
//கலைந்து பறக்கும்
ReplyDeleteகேசத்தின் இழைகளை
ஒரு தேவதையின் விரல்கள் கொண்டு
ஒதுக்கி விடுகிறாள்
//
மிகவும் ரசித்தேன்
நன்றி மயாதி!
ReplyDeleteநன்றி பிரேம்!
-ப்ரியமுடன்
சேரல்
அட்டகாசம். Fantastic. வேறு என்ன சொல்ல!
ReplyDeleteஅனுஜன்யா