Friday, June 19, 2009

பிரவாகம்

சுனையென ஊற்றெடுத்து
பாறைகள் ஊடு புகுந்து
செங்குத்தாய்க் கீழே விழுந்து
அகல விரிந்துகொண்டு
வழிப்படூஉம் புணைகள் கரையொதுக்கி
பூக்கள், வேர்கள், உடல்கள், காற்று நனைத்து,
தேங்கித் தனிமை கொண்டு,
மீண்டும் புரண்டோடி
என்றோ ஒருநாள் சமுத்திரத்தில் சேர்ந்து
தொலைந்து போகிறது

வெளிகள் கடந்து,
உருவங்கள் மாறி
ஒரு நதியென நடந்து போகும்
ஒரு கவிதை

7 comments:

  1. நதியினை கவிதைகூட ஒப்பிட முடியுமா? ம்ம்ம்ம்...நன்று

    ReplyDelete
  2. சேரல் அசத்திட்டீங்க .

    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  3. அருமையான கவிதை சேரல்.

    ReplyDelete
  4. நன்றி கோகுல்!

    நன்றி பிரேம்!

    நன்றி பிரவின்ஸ்கா!

    நன்றி yathra!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  5. மிக அழகாக இருக்கு சேரல். காவிரி பாயும் பல இடங்கள் பரிச்சயம் என்பதால், ஒவ்வொரு வரியையும் உருவகப் படுத்தி இரசிக்க முடிந்தது.

    அனுஜன்யா

    ReplyDelete