Monday, June 15, 2009

தோழி என்றொரு தேவதை



இந்த நூறாவது பதிவு, என் தோழிக்காக..
.


முன்னறிவுப்புகள்
எதுவுமின்றி
ஒரு மழைநாளில்
வாழ்வில் வந்து சேர்ந்தாள்
தோழி என்றொரு
தேவதை!

காத்திருந்தது போல,
சிறகுகளைச்
சிருஷ்டித்துக்கொண்டு
உடன் பயணமாகத்
தயாராகியிருந்தது,
எனக்கு முன்
என் மனது

-----------------------

பேருந்து நெரிசலில்
பயணச்சீட்டு
வாங்கித் தந்ததும்
நன்றி சொல்லிப்
புன்னகைத்தாள்
அந்தப் பெண்

யாருக்குத் தெரியும்?

நாளை அவள்,
'என்னைப் பற்றியும்
எழுதுவாயாடா?'
என்று கேட்கும்
தோழியும் ஆகலாம்

------------------------

நானாக
இருந்த என்னை
யாரோவாகச் சமைத்தது
காதல்

யாரோவாகிக்
கிடந்த என்னை
மீண்டும்
நானாக்கிக் கொடுத்தது
நட்பு

------------------------

எதை எதைப் பற்றியோ
பேசிக் கொண்டோம் நாம்

யார் யாரோ பேசிக்கொண்டார்கள்
நம்மைப் பற்றி

நம் பேச்சில் பெரிதாக
சுவாரசியம் இல்லை
உண்மை இருந்தது

அவர்கள் பேச்சில்
சுவாரசியம் நிறைய இருந்தது
ஆனால்
உண்மை இல்லை

----------------------------------

விட்டுக் கொடுக்கிறேன்
அல்லது
விட்டுக் கொடுக்கிறாள்
வளர்கிறது காதல்

சண்டையிடுகிறேன்
அல்லது
சண்டையிடுகிறாய்
வளர்கிறது நட்பு

24 comments:

  1. சேரா , யார் அந்த பெண் , எப்போ பார்த்தீங்க? எனக்கு எதோ பொறி தட்டுரமாதிரி
    இருக்கே?

    -செபா

    ReplyDelete
  2. நிச்சயம் கொடுத்து வைத்தவர்கள் உங்கள் தோழியும், அவரது நட்பும்..

    எதை எதைப் பற்றியோ
    பேசிக் கொண்ட வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது..

    ReplyDelete
  3. நன்றாக இருக்கிறது தோழரே.முன்னுரையிலே "தோழிக்காக" என்ற பிறகு எதுவும் எழுத தோன்றவில்லை. அறிவுமதியின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  4. நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் சேரல்

    ReplyDelete
  5. //எதை எதைப் பற்றியோ
    பேசிக் கொண்டோம் நாம்

    //

    இந்த கவிதை மிக மிக நன்று

    ReplyDelete
  6. //நானாக
    இருந்த என்னை
    யாரோவாகச் சமைத்தது
    காதல்

    யாரோவாகிக்
    கிடந்த என்னை
    மீண்டும்
    நானாக்கிக் கொடுத்தது
    நட்பு//

    காதலுக்கும் நட்புக்கும் சரியான வார்த்தைகள் கவிதயில்

    100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. எனதினிய நண்பருக்கு...
    பல நூறுக்கு
    நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  8. 100 வது பதிவுக்கு வாழ்த்துகள் சேரல், கவிதை அழகு.

    ReplyDelete
  9. நன்றி பூபி!

    @செபா,
    பொறி எல்லாம் தட்டத் தேவையில்லை தல :)

    @Bee'morgan,
    நன்றி பாலா!

    @கோகுலகிருஷ்ணன் கந்தசாமி,
    நன்றி தோழரே!

    நன்றி பிரேம்!

    @ப்ரியமுடன்....வசந்த்,
    மிக்க நன்றி! தொடர்ந்து வாருங்கள்

    நன்றி kartin!

    நன்றி yathra!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  10. சதம் அடிச்சிட்டேங்களா தல...
    அப்படியே சச்சின ஓவர் டேக் பண்ண வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. நூராவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சேரல்.

    கவிதை அத்தனையும் பிடித்திருந்தது.
    மிக நல்லக் கவிதை.

    (சில தினங்கள் வேலை பளுவால் உங்கள் இடுக்கைகள் சிலவற்றை இன்னும் படிக்கவில்லை நேரம் ஒதிக்கி படிக்கிறேன்)

    ReplyDelete
  12. நன்றி மயாதி!

    நன்றி ஆ.முத்துராமலிங்கம்!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  13. வாழ்த்துகள் சேரல் .
    கவிதை நல்லா இருக்கு.

    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  15. சேரல்,

    " நட்புக் காலங்கள் " சாயல் கொஞ்சம் இருக்கிறது.

    ReplyDelete
  16. 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே...
    எல்லாக் கவிதையும் இயல்பு,அழகு..
    என்னோட சாய்ஸ்...
    //எதை எதைப் பற்றியோ
    பேசிக் கொண்டோம் நாம்

    யார் யாரோ பேசிக்கொண்டார்கள்
    நம்மைப் பற்றி

    நம் பேச்சில் பெரிதாக
    சுவாரசியம் இல்லை
    உண்மை இருந்தது

    அவர்கள் பேச்சில்
    சுவாரசியம் நிறைய இருந்தது
    ஆனால்
    உண்மை இல்லை//

    ReplyDelete
  17. நன்றி பிரவின்ஸ்கா!

    நன்றி தாரிணி!

    @Ramprabhu,
    அது 'நட்புக்காலம்'. என்னதான் நட்பைப் பற்றி நாம் எழுதினாலும் மக்களுக்கு அறிவுமதியின் நட்புக்காலம் நினைவு வரத்தான் செய்யும். ஏனென்றால் நட்பைப் பற்றி நம்மிடம் இருக்கும் ஒரே நூல் அதுதான். காதலைப் பற்றிக் கேட்டால் கோடிக்கணக்கில் குறிப்பு சொல்லுவோம். என்ன செய்வது? மற்றபடி இது ஒரு போலச்செய்தல் முயற்சிதான். ஆனால் இதில் இருக்கும் உணர்வுகள் உண்மை.

    நன்றி தமிழ்ப்பறவை!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  18. நட்பையும்,காதலையும் நன்றாக எழுயுள்ளீர்கள்.

    ReplyDelete
  19. நானாக
    இருந்த என்னை
    யாரோவாகச் சமைத்தது
    காதல்

    யாரோவாகிக்
    கிடந்த என்னை
    மீண்டும்
    நானாக்கிக் கொடுத்தது
    நட்பு

    நல்ல வரிகள்

    ReplyDelete
  20. நன்றி துபாய்ராஜா!

    நன்றி மதுசூதனன்!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  21. மீண்டும் சில அழகான கவிதைகள். இரம்மியமான வரிகள்.

    இவ்வளவு விரைவில் சதம்! வாழ்த்துகள் சேரல். நீங்கள் தொடர்ந்து இந்த மாதிரி மிளிர வேண்டும்.

    அனுஜன்யா

    ReplyDelete
  22. எல்லாமே உங்கள் brand சேரல்...நூறுக்கு,..நூத்துக்கு நூறு!

    ReplyDelete
  23. all the poems are drizzling like Dew drops on roses....

    All the Best Seral . Congrats. Keep providing the poems..

    ReplyDelete