Friday, July 03, 2009

படிந்த வரிகள் - 7

கடவுள் செய்தும்,
காதல் செய்தும்,
கடவுள்
காதல் செய்தும்,
கடவுள் காதல் செய்தும்,
காதல்
கடவுள் செய்தும்,
காதல்கடவுள் செய்தும்......
இந்த இரட்டைக் குவியங்களைத்
திருப்திப்படுத்தப் போய்
நீள்வட்டப் பாதையில்
தலைகுனிந்தே சுற்றுகிறது பூமி !

-நண்பன் ஞானசேகர் (http://jssekar.blogspot.com/)

5 comments:

  1. நல்லா இருக்கே!!!
    அறிமுகம் நல்ல விசயம்.

    ReplyDelete
  2. கவிதானுபவத்தில் ஒரு புது பரிமாணம். இந்தக் கவிஞர்களை வாசிக்க வேண்டும்!

    ReplyDelete
  3. வழக்கம் போல எனக்கு அறிமுகமில்லா கருவை, புரிகிற மாதிரி புரியாமல் அழகாக எழுதியுள்ளார்.

    ReplyDelete
  4. உங்கள் வலைதளத்திற்கு வருவது இதுவே முதல் முறை !!!

    அனைத்து கவிதைகளும் அருமை சேரல்.

    கொஞ்சம் வித்தியாசமான வாசிப்பானுபவத்தை தருகிறீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. //
    தலை குனிந்தே
    //
    எவ்வளவு அழகான
    கற்பனை
    அறிமுகத்துக்கு நன்றி

    ReplyDelete