யாரும் பார்க்காத பொழுதொன்றில்
எல்லோரும் பார்க்க
பருத்த உடல் தூக்கி
ஓட்டமும் நடையுமாய்க்
கீழே குனிந்தபடி
மூச்சிறைக்க ஓடி வந்தும்
பேருந்தைத் தவற விட்டிருந்தாள்
ஒரு பெண்
எந்தச் சலனமும் அற்று
தத்தம் வழிதொடர்ந்தனர்
சுற்றி இருப்போர்
தன் சுயத்துக்குப்
பேரழிவு நிகழ்ந்ததெனச்
சூன்யத்தைச் சுமந்தபடி
இடம் விட்டகல எத்தனிக்கிறாள் அவள்
இன்றிரவு அவள்
தாமதமாகத் தூங்கக்கூடும்
ரொம்ப நல்லா இருக்கு சேரல்.
ReplyDelete:(.. paavam illa...
ReplyDeletenalla kavanippu, nalla kavithai
vidhya
நல்லா இருக்குங்க
ReplyDeleteநல்ல பதிவு சேரல்...
ReplyDeleteஅழகாய் சொல்ல முடிந்திருக்கிறது சுய வலைக்குள் சிக்கிக் கிடப்பதன் தவிப்பை!!
ReplyDeleteஆழம்..!
ReplyDeleteநல்ல கவிதை சேரல்.
ReplyDeleteநல்லா இருக்கு.
ReplyDeleteஅருமை சேரல்.
ReplyDeleterompa nalla irukku cheral
ReplyDeletemankuthiray
excellent..
ReplyDeleteரொம்ப அழகா சொல்லியிருகீங்க!
ReplyDeleteசேரல்.
ReplyDeleteநல்லா இருக்கு
:)
ReplyDeleteகருத்துகளுக்கு நன்றி நட்பே!
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்