Saturday, August 15, 2009

சுதந்திரநாள் கவிதை

கவிஞர் யுவன் (சந்திரசேகர்) எழுதிய கவிதை இது. 'முதல் 74 கவிதைகள்' என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

பேட்டி

ஊர்வதற்கே வாழ்வென
உடம்பெல்லாம் கால் கொண்ட
மரவட்டை ஒன்று
ஓய்வாய்ச் சுருண்டிருக்கக்
கண்டேன்
பொழுது போகாமல்
கேட்டேன்
'இந்திய சுதந்திரத்தின்
பொன்விழா பற்றி....'
'என்ன பெரிய சுதந்திரம்
பையன்கள் இன்னும்
குத்துகிறார்கள் குச்சியால்'
இலைகளிலும் மலர்களிலும்
சிறுநீர்த்துளிகளுடன்
அருகிலிருந்த செடி
ஆமென்றது தலையசைத்து.
பையனாய் இருந்து
வந்தவன்தான் நானும் எனச்
சொல்லாமல் மறைத்து,
'என்றாலும்
வாழ்க்கைத் தரம்.....?'
என்றேன்.
'நோ கமெண்ட்ஸ்' என்று
நகர்ந்தது தன்
நூறாவது காலை
எதிர்காலத்துள்
இழுத்து வைத்து.

5 comments:

  1. Super! கவிதையில் நீங்கள் குறிப்பிட்ட தற்போதைய நிகழ்காலத்துக்கும் - அன்று சுதந்திரம் பெற்ற பொழுது மக்கள் அடைந்த உணர்வுக்கும் நிறைய.....Anyway If you accept or not!
    சுதந்திர தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நோ கமெண்ட்ஸ்

    ReplyDelete
  3. அப்பா...என்ன அழகான பார்வையும் வெளிப்பாடும் சேரல்."சுதந்திர தின கவிதை" இல் இப்படியெல்லாம் யோசிக்க முடியும் என்பது பெரிய அழகு!//"நோ கமண்ட்ஸ்"என்று நகர்ந்தது தன் நூறாவது காலை எதிர் காலத்துள் இழுத்து வைத்து//நம்பிக்கையே வாழ்க்கை-வலிமையும்!ஜெய்ஹிந்த்!

    ReplyDelete
  4. சிறுநீர்த்துளிகளுடன்
    அருகிலிருந்த செடி
    ஆமென்றது தலையசைத்து!!

    cutely expressed!!

    ReplyDelete