Wednesday, October 28, 2009

வயது வராதவர்களுக்கு மட்டும்

மழைப்பூ உதிர்ந்து கிடக்கும்
தார்ச்சாலை எங்கும்
குட்டிக் குளங்கள்

குளத்துக்கொரு வானம்

வானத்துக்கொரு சூரியன்

ஆளுக்கொரு சூரியன்
வைத்து விளையாடுவோம்
வா

14 comments:

  1. நானும் கூட வருகிறேன்

    கவிதை அழகு

    ReplyDelete
  2. அழகாய் இருக்கு..

    ReplyDelete
  3. பொருத்தமான தலைப்பு.

    ரசித்தேன்.

    ReplyDelete
  4. ரசித்தேன்... பாரட்டுக்கள்.

    ReplyDelete
  5. கற்பனை பண்ணிபார்த்தால் இன்னும் ரசனையா இருக்கு சேரல்...

    ReplyDelete
  6. மழை வந்தாலே எல்லோரும் மழலைகளாகிப் போகிறோம். அருமையான கவிதை சேரல் :)

    ReplyDelete
  7. கருத்துகளுக்கு நன்றி நட்பே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  8. ரசித்தேன் !! அப்புறம் தான் தெரிந்து கொண்டேன் சென்னையில் மழை என்று ;-))

    ReplyDelete
  9. அழகு, பொருளைக் காட்டிலும் பார்வையில் இருக்கிறது என்பர். உங்கள் பார்வை அழகு.

    ReplyDelete