Thursday, March 04, 2010

அந்நியனின் குறிப்புகள்

பூக்களை எரித்த
சாம்பலை
உண்டு கொழுக்கின்றன
பட்டாம்பூச்சிகள்

பிள்ளைக்கறி விற்கும்
உணவகத்தில்
தலைக்கறி வேண்டுமென்கிறாள்
நிறைமாத சூலியொருத்தி

குருதியொழுகும்
சதைத்துண்டினை
ருசி பார்க்கும் வேகத்தில்
கவ்விப் பறக்கின்றன
வெள்ளைப்புறாக்கள்

விளையாடிக் கொண்டிருக்கும்
ரோஜாச் செடிகளைக்
கற்பழிக்கும் முடிவோடு
வேர் பிடுங்கி வெளிவந்து
காத்திருக்கின்றன
சில பட்ட மரங்கள்

இன்னும் உயிர் பிரிந்துவிடாத
சாது ஒருவனின்
சிதைந்த உடலை
மழைக்காலத்துக்கென
இழுத்துச் செல்கின்றன
சிற்றெறும்புகள்

மேலும்
இந்த நகரத்தில்,

பதிலுக்குப் புன்னகைக்க மறுப்பதோடு
முறைத்துப் பார்க்கவும் செய்கிறார்கள்,
அப்படியே போதிக்கப்பட்ட
குழந்தைகள்

20 comments:

  1. அருமை.. மனதின் ஆழம் வரை பாயும் வரிகள்..

    ReplyDelete
  2. ivlo veruppu/varutham ku enna kaa
    ranam?

    ReplyDelete
  3. நன்றி தோழி...

    நன்றி நண்பரே!

    ஈற்றில் இருக்கும் நான்கு வரிகள் தான் காரணம் தோழி...

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. சேரல்!!
    மண வாழ்த்துக்கள்!!
    வரிகள் வலிமை!!

    ReplyDelete
  5. திருப்பி புன்னகைக்க மறுப்பதால், இவ்வளவு கொடுமையான் ஒப்பீடு வேண்டுமா என்ன?

    ஒரு புன்னகை போதவில்லை என்றால், இன்னும் கொஞ்சம் சேர்த்தோ, இல்லை ஒரு கோணல் முக செய்கையோ, சிறு கோமாளித்தனமோ போதுமே, குழந்தைகள் தானே...

    ReplyDelete
  6. படிக்கும்போதே முகம் இறுக்கவும், பற்களைக் கடித்துக்கொள்ளவும் செய்யும் வகையில் மொழிவழி உணர்வுகளைக் கடத்துவதை நான் சிலரின் கவிதைகளில் காணும்போது, மொழியின் வலிமையை வியப்பதுண்டு.

    அந்த மொழியின் வீரியம் உங்களின் இந்தக் கவிதையில் நன்கு புலனாகிறது.

    (அட! பாராட்டுக்கள்னு ஒரு வரியில சொல்றத விட்டுட்டு..)

    ReplyDelete
  7. வணக்கம் தோழரே,
    திடீரென முகத்தில் அறைந்து விடுகிறீர்கள் உங்கள் கவிதைகளால்...நன்று என்று சொல்ல முடியவில்லை...ஆழமாகவும் வீரியமாகவும் இருக்கிறது. வாசித்து முடித்த பொழுது கடைசி வரிகளின் பாதிப்பு என்று தான் உணர்ந்தேன்.. அதையே நீங்களும் ஆமோதித்திருக்கிறீர்கள். சிறப்பு கவிதை...

    ReplyDelete
  8. //பதிலுக்குப் புன்னகைக்க மறுப்பதோடு
    முறைத்துப் பார்க்கவும் செய்கிறார்கள்//
    இது எனக்கு ஒரு கிராமத்தில் ஏற்பட்டுயிருக்கிறது.

    நன்றாக உள்ளது :)

    ReplyDelete
  9. சேரல், இறுதியான நான்கு வரிகள் மிகவும் பாதிக்கின்றன...

    //பதிலுக்குப் புன்னகைக்க மறுப்பதோடு
    முறைத்துப் பார்க்கவும் செய்கிறார்கள்,
    அப்படியே போதிக்கப்பட்ட
    குழந்தைகள் //

    சக மனிதனின் மீது அன்பு செய்யத் தெரியா தலைமுறை ஒன்று வளர்க்க்கப்பட்டு
    வருகிறதோ என வருத்தம்தான் மேலிடுகிறது.

    ReplyDelete
  10. உண்மைதான் சேரல் , குழந்தைகள் பிறந்த உடனேயே முதிர்ந்து விட வேண்டுமென்பது இன்றைய பெற்றோர்களின் ஆசையாகவும் இருக்கிறது .

    இப்படித்தான் இருக்கும் போல இனிமே ..

    ReplyDelete
  11. ஒரு பச்ச புள்ள சிரிக்காததுக்கா இம்புட்டு கொலைவெறி ...

    Anyway Welcome back Thala :-)

    ReplyDelete
  12. ரொம்ப நல்லாருக்கு சேரல்..

    ReplyDelete
  13. பதிலுக்குப் புன்னகைக்க மறுப்பதோடு
    முறைத்துப் பார்க்கவும் செய்கிறார்கள்,
    அப்படியே போதிக்கப்பட்ட
    குழந்தைகள் //

    :(

    வலி மிகு சொல்லாடல் உங்களது அந்நியனின் குறிப்புகள்.. :(

    ReplyDelete
  14. நெஞ்சை தொட்டது ஆழ்ந்த பொருள்.....

    :)

    ReplyDelete
  15. மொழியின் வலிமையை சாதாரணமாக கடந்து போக முடிய வில்லை...

    ReplyDelete
  16. //பதிலுக்குப் புன்னகைக்க மறுப்பதோடு
    முறைத்துப் பார்க்கவும் செய்கிறார்கள்,//

    அந்த நடைமுறைக்கு கட்டுற்ற கண்கள்...

    நல்ல கவிதை... தாக்கமும்....

    ReplyDelete