Tuesday, May 11, 2010

புணர்ச்சி

வார்த்தைகளை உதிர்த்துவிட்டு
மௌனமாகிக் கொண்டோம்

உதிர்ந்த வார்த்தைகள்
அந்தரத்தில் மோதிக்கொண்டன

சண்டையிட்டன

சமாதானம் கண்டன

கட்டித் தழுவின

புணர்ந்து களைத்தன

யாவும் பார்த்திருந்தபின்
புன்னகைத்துக்கொண்டே
ஆயத்தமானோம்
அந்தரத்தில் உறவுகொள்ளும்
வேறிரு வார்த்தைகளை
உதிர்த்துவிட...

9 comments:

  1. //அந்தரத்தில் உறவுகொள்ளும்
    வேறிரு வார்த்தைகளை
    உதிர்த்துவிட...
    //
    continue again

    நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  2. இறுதி வரிகளில் மீண்டும் துவஙுகிறது கவிதை

    ReplyDelete
  3. நல்லாருக்கு சேரல்.

    ReplyDelete
  4. யாவும் பார்த்திருந்தபின்
    புன்னகைத்துக்கொண்டே
    ஆயத்தமானோம்
    அந்தரத்தில் உறவுகொள்ளும்
    வேறிரு வார்த்தைகளை
    உதிர்த்துவிட...//

    அடடா :)

    ReplyDelete
  5. மிக நல்ல கவிதை, பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. அருமைங்க சேரல்....

    ReplyDelete