Saturday, March 26, 2011

டவ்

'டவ் பாரு டவ்'
என்றாள் அம்மா

விரலிடுக்கில்
காற்றைப் பிடித்திழுத்து
புறாவே வந்ததெனச்
சிரித்துச் சொல்கிறது
குழந்தை
'டவ்'

காற்றை லேசாக
அதிர்வூட்டி
நானும் சொல்லிப் பார்த்தேன்
'டவ்'

எனக்குமாகச் சேர்த்தோர்
இறகைப் பரிசளித்துப் போனது
மூவரையும் ரசித்திருந்த
டவ்

4 comments:

  1. கவிதை நல்லா இருக்குங்க!

    ReplyDelete
  2. நாலுமே ரொம்ப நல்லா இருக்குங்க சேரல்.

    அதுல பகற்கலவியும்,
    சிநேகிதமும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  3. Nallarukku.

    - Pravinska.

    ReplyDelete
  4. மிக அருமை நண்பரே

    ReplyDelete