Wednesday, December 31, 2008

ஓடலும் ஓடல் நிமித்தமும்



உயிர்மை.காம் நடத்தும் 'உயிரோசை' இணைய வார இதழில் இக்கவிதை வெளியானது.


வெளியூர்ப் பேருந்து நிலையத்தில்
தனியாய் வேடிக்கை
பார்த்துத் திரிந்ததற்காய்
அப்பா பலர்முன்
அறைந்தபோது
முடிவு செய்து கொண்டாள்
இப்போது
ஒன்பதாவது படிக்கும்
பக்கத்து வீட்டு ஊர்மிளா,
பெரியவள் ஆனதும்
எவனையாவது
இழுத்துக்கொண்டு
வீட்டை விட்டு ஓடி விடுவதென்று.

2 comments:

  1. Butterfly effect!!
    எங்கேயோ எப்போதோ பட்ட சிறு காயம் பின்னர் எடுக்கும் ஒரு பெரிய முடிவுக்கு ஏதுவாய் இருப்பதை 'சுருக்' என்று சுருக்கியமை அருமை.பொருத்தமான தலைப்பு.ரசித்தேன்.

    ReplyDelete
  2. நன்றி நண்பா!

    உன் ஊரின் பேருந்து நிலையத்தில் பார்த்த ஒரு சக நிகழ்வு என்னுள் எழுப்பிய கேள்விதான் இந்தப் படைப்பு.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete