புத்தகக் கண்காட்சி
கையில் கவிதை நூல்
கவனத்தைக் கலைத்தபடி
வெளிக்குதித்து
ஓடி விளையாடுகின்றன
சில சிறு கவிதைகள்
----------------------
தாளின் தரமோ,
தள்ளுபடியோ,
அட்டைப்படமோ,
அடக்கவிலையோ,
அருகிருக்கும் பெண்ணோ,
புத்தகம் தெரிவு செய்யும்
காரணியெனில்
நாம்
நாகரிகமற்றவர்களே!
----------------------
ஸ்டாக் இல்லை சார்,
பத்து பர்சன்ட் தள்ளுபடி,
ஒரு புக் வாங்கினா ஒரு புக் இலவசம்,
எவ்வளவோ முயன்றும்
காணமுடியவில்லை
முனைக்கடை அண்ணாச்சிக்கும்
இவர்களுக்குமிடையே
குறைந்தபட்சம் ஆறு வித்தியாசம்
ஒவ்வொரு முறை புத்தகக் கண்காட்சி செல்லும் போதும், நாம்தான் இந்த இலக்கிய உலகத்தையே தூக்கி நிறுத்தப் பிறந்தவர்கள் என்ற கர்வம் வரும் எனக்கு, உங்களின் இரண்டாவது கவிதை பலமான அறைதான். நீங்கள் கொடுத்திருக்கும் அனைத்து சான்றுகளையும் எனது புத்தகத் தேர்விற்கு நான் பயன்படுத்தி இருப்பதாக உணர்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஅழகாக இருக்கின்றன கவிதைகள்.
தொடர்ந்தும் எழுத வாழ்த்துகிறேன்
அன்புடன்
ப. அருள்நேசன்
@ Subi
ReplyDeleteநாம் என்பதில் நானும் அடக்கம், சில தருணங்களில். 'நாம்' ல் இருந்து 'நான்' ஐத் தனித்தெடுக்க எப்போதும் முயன்று வருகிறேன்.
@சகாராவின் புன்னகை
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே! தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்.
-ப்ரியமுடன்
சேரல்
///அடக்கவிலையோ,
ReplyDeleteஅருகிருக்கும் பெண்ணோ,
புத்தகம் தெரிவு செய்யும்
காரணியெனில்
நாம்
நாகரிகமற்றவர்களே!////
நல்ல விழிப்பு இருக்கிறது...
வாழ்த்துகள்
நன்றி பேரின்பா!
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்