Friday, September 04, 2009

பார்த்தன்களுக்குப் புதிய கீதை

எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது

ஆம்
பார்த்தோம்

எது நடக்கிறதோ
அது நன்றாகவே நடக்கிறது

ஆம்
பார்த்துக்கொண்டிருக்கிறோம்

எது நடக்கவிருக்கிறதோ
அதுவும் நன்றாகவே நடக்கும்

ஆம்
அதையும் பார்த்துத் தொலைப்போம்,
பிழைத்திருப்பின்

நடப்பதெதையும்
பார்த்துக்கிடப்பதன்றி
வேறென்ன கிழித்துவிட
முடிகிறது நம்மால்?

10 comments:

  1. பெரும் சாட்டையடி சும்மா 'நடப்பதெல்லாம் நன்மைக்கே'
    என்று சொல்லிகொள்பவர்களுக்கு.
    இயல்பான வார்த்தைகளுடன் இருப்பது
    இக்கவிதையின் சிறப்பு

    ReplyDelete
  2. அட... !!!
    :)

    வித்யா

    ReplyDelete
  3. ரசிக்க முடிந்தாலும், உங்க கவிதை மாதிரி இல்லை.

    ReplyDelete
  4. சந்தான சங்கர்/// அழைப்பிதல்// இது அழைப்பிதழ் தானே??

    --வித்யா

    ReplyDelete
  5. நல்லாஇருக்கு சேரல் :)

    ReplyDelete
  6. யானையை ஒரே அடியில் வீழ்த்த வேண்டும் எனில் அதன் நெற்றிபொட்டில் குறிவைக்க வேண்டும்.

    இது அந்தவகை கவிதை. நெத்தியடி சேரல் :)

    ReplyDelete
  7. கோபமும், எள்ளலும் கொண்ட வரிகள். நானே எழுதியது போல ஒரு உற்சாகம். அருமை.

    ReplyDelete
  8. gumaaltikka iruku thala

    ReplyDelete
  9. கருத்துகளுக்கு நன்றி நட்பே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete