
இயக்கமற்று
ஓய்ந்திருக்கின்றன மரங்கள்
எரிக்கும் வெயிலில்
உயிர் மீதமிருப்பதறியாது
உயிரிழந்து கொண்டிருக்கின்றன
இலைகள்
காற்றுங்கூடச்
சாவதற்கெத்தனிக்கிறது
உறைந்து கிடக்கவெனச்
சாபமிட்ட சூன்யக்காரியை
நொந்தபடி
விரிந்த சிறகசைத்துக்
கடந்து செல்கிறது
கடல் தாண்டி வரும்
ஒற்றைப்பறவை
உயிர் கொண்டெழுந்த காற்று
உயிர் பரப்புகிறது
ஒவ்வொரு இலையாக
காத்திருந்து
ReplyDeleteகண்கள் பூத்து
புத்தி வறண்டு
இன்று இறப்போம் என்ற தருவாயில்
உயிர் நிரப்பிச் செல்கிறது உன் கவிதை !!
உயிர் அருமை நண்பா !! ( 'உன் ' என்ற வார்த்தையை கவிதைக்காக சேர்த்தேன் , மன்னிக்கவும் !)
உங்களை தொடர் விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன் ;-)
அருமையா இருக்கு சேரல்!
ReplyDeleteஅருமை நண்பா !!
ReplyDeletevery nice
ReplyDeletenice seral
ReplyDeleteபிடித்திருக்கிறது
ReplyDeleteஎங்கோ கூட்டிச் செல்கிறது உயிர் கொண்டு
ReplyDeleteஅருமையான கவிதை சேரல் ...
வாழ்த்துக்கள்
இது சிதறல் http://www.sidaralkal.blogspot.com/
Nallarukku ..
ReplyDelete- Pravinska.