Thursday, January 07, 2010

மீள் சிறகுகள்

வேறு கவனமெதையும்
மிகக்கவனமாகத் தவிர்த்த
ஓய்வுகளற்ற
நெடியவிரு பயணங்களினூடே
எதேச்சையாக எனும்படியாகத்தான்
எதிர்ப்பட்டுக்கொண்டோம்
ஒரு பறவையும்
நானும்

வளையலகு கொண்டதொரு
பறவையின் சிறகுகளும்,
விரிந்த கண்களுடைய
யாத்ரீகனொருவனின்
கால்விரல்களும்,
பிறிதொரு நாள்
வந்தமர்ந்து
இளைப்பாறக்கூடும்
இருவேறு பயணக்குறிப்புகளில்

-சேரல்

உரையாடல் கவிதைப்போட்டிக்காக.....

போட்டிக்கான எல்லாக் கவிதைகளும் இங்கே....

26 comments:

  1. வாழ்த்துகள் சேரா :)

    ReplyDelete
  2. கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..

    ReplyDelete
  3. அருமையான கவிதை சேரல்.கண்டிப்பா ஜெயிக்கும்.ஜெயிக்கணும்..

    வாழ்த்துக்கள் சேரல்!

    ReplyDelete
  4. அருமையான கவிதை.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  5. ரொம்ப நல்லா இருக்கு சேரல்

    ReplyDelete
  6. @Bee'morgan
    நன்றி பாலா... :)

    @முனைவர்.இரா.குணசீலன்
    நன்றி நண்பரே!

    @பா.ராஜாராம்
    நன்றி பா.ரா..... உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் :)

    @ஆறுமுகம் முருகேசன்
    நன்றி நண்பரே!

    @மண்குதிரை
    நன்றி தோழா!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  7. மிக அருமை.. வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  8. ரொம்ப நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள்.

    வித்யா

    ReplyDelete
  9. வாழ்த்துகள் வெற்றி பெற வாழ்த்துகள்

    நல்லா இருக்குங்க

    ReplyDelete
  10. அருமை நண்பரே
    நிச்சயம் ஜெயிக்க வேண்டும் வாழ்த்துகிறேன்
    நண்பா

    ReplyDelete
  11. மிக அழகாக இருக்கிறது...கண்டிப்பாக வெற்றி பெரும்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. யாத்ரீகனின் கால் விரல்களை சந்திக்க ஆவலாய் ...
    மிக அருமை சேரல்

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. @Gowripriya,
    @Vidhoosh
    @நேசமித்ரன்,
    @பாலா,
    @கமலேஷ்,
    @ஜெனோவா

    நன்றி நண்பர்களே! :)

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  14. அருமை :-) வாழ்த்துகள் அண்ணா ..
    ஐயோ சொக்கா .. எனக்கில்லே .. எனக்கில்லே .. ;-)

    ReplyDelete
  15. மென்மனம் கொண்ட பார்வை.

    யாத்ரீகனின் குறிப்பு அழகு. பறவையின் பதிப்பு வந்தவுடன் சொல்லுங்க :)

    வாழ்த்துகள் சேரல்.

    ReplyDelete
  16. அருமையான கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  17. ரொம்ப நல்லாருக்கு சேரல்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. ரொம்ப நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. @ரெஜோ
    பெருஞ்சிரிப்பு....உன்னைத் தெரியும் தம்பி...... :)

    @பாலகுமார்
    புன்னகை....நன்றி :)

    @அவனி அரவிந்தன்
    @உழவன்
    @S.A. நவாஸுதீன்

    நன்றி நண்பர்களே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  20. Thala "Puthiya Paravai" yaa,

    Vazhthukkal

    ReplyDelete
  21. அழகு சேரல். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  23. அருமையான கவிதை.

    கவிதையுடன் ஒன்றிப் போக வைக்கிற வார்த்தைகள்........

    ReplyDelete
  24. அருமை. வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. கவிதை பிடித்திருக்கிறது ... வெற்றி பெற வாழ்த்துகள் ... எவ்வளவு தாமதமாக இதை நான் வாசித்திருக்கிறேன்

    ReplyDelete
  26. நன்றி நண்பர்களே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete