Wednesday, February 10, 2010

அப்படியே

அப்படியே இருப்பது
சௌகரியம் என்றாலும்
எப்போதும் வாய்த்துவிடுவதில்லை

காய்ந்துகிடக்கும்
தார்ச்சாலைகளை
நக்கி நக்கி ஊர்ந்துபோகும்
வெயில் நாயைத்
துரத்தியடித்துப்
பெய்துவிடுகிறது மழை

மழை நனைத்த
எதுவும்
அதுவாகவே இருப்பதில்லை...

ஆனாலும்
மழையில்
உடைந்து விழும்
நீரின் ஒவ்வொரு துண்டும்
இருந்து விடுகிறது
நீராகவே

19 comments:

  1. நல்லா இருக்கு சேரல்

    ReplyDelete
  2. என்ன தலைவா..? ரொம்ப நாளா ஆளைக் காணோம்..?

    கவிதை வழக் கலக்.

    ReplyDelete
  3. நன்றி ஜோதி!

    நன்றி ராஜு!
    சொந்த வேலைகள், வாழ்க்கையில் மாற்றங்கள் இந்த இடைவேளைக்குக் காரணம். இன்னும் சில காலம் நீடிக்கும் இவ்விடைவேளை. மேலும் கொஞ்சம் அனுபவங்களுடன் மீண்டும் வருவேன் :)

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. அருமைங்க, ரசித்துப்படித்தேன்...

    ReplyDelete
  5. நல்லா இருக்கு சேரல். நீண்ட இடைவேளை. முடிந்த போதெல்லாம் எழுதுங்கள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  6. திசைகளை அறிவிக்காமல் காணாமல் போகும் மேகம் ஒரு பெருங்கோடையின் உச்சிப் பொழுதில்
    பெய்யும் மழை இந்த கவிதைக்காரனும் கவிதையும்

    ReplyDelete
  7. நன்றி பாலாசி...

    நன்றி அனுஜன்யா....
    தொடர்ந்து எழுதுவேன். இன்னும் சில நாட்களுக்குப் பிறகு :)

    நன்றி நேசமித்ரன்....
    அடை மழைக்காலமும், தகிக்கும் கோடையும் மாறி மாறி வருவதுதானே இயல்பு.... :)

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  8. கவிதையும் பின்னூட்டங்களும் ரசனை/

    ReplyDelete
  9. கவிதை நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  10. கவிதை நல்லாயிருக்கு சேரல்,
    திருமணத்திற்கு வாழ்த்துகள். வர முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  11. நன்றி வித்யா...

    நன்றி கருணாகரசு...

    நன்றி வாசு சார்... :)

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  12. நல்லாயிருக்குங்க கவிதை.

    ReplyDelete
  13. செபத்தியான்12:10 PM, February 15, 2010

    நாளாக நாளாக உங்கள் நடை மெருகேறிக்கொண்டே வருகிறது. அருமை தல

    ReplyDelete
  14. சாரல் அடிக்கிறது, சேரல். :)

    ReplyDelete
  15. கவிதை நல்லா இருக்கு. மற்ற கவிதைகளுடன் இதுவும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி. அதற்கான தகுதியும் இருக்கு.

    ReplyDelete
  16. செமையா இருக்கு பாஸ் :)

    ReplyDelete