Monday, April 19, 2010

அலைநீளம்

கடலற்ற
கடலினடியே
கடலின் கரையாகிறது

உள்ளங்கையோடும்
ரேகைகள் போலும்
ஒன்றுபோலிருப்பதில்லை
மாறி மாறி
எல்லை போடும் கடலலைகள்

அலைநீளம்
நிர்ணயிக்கிறது
கடலின் பரப்பை
அல்லது
கரையின் பரப்பை

ஒத்தத் தொலைவிருந்து
எல்லாம் ரசித்திருக்கும்
வானம் பார்த்துக் கிடக்கின்றன
கடலும்,
கடலாகக்கூடும்
கரையும்

8 comments:

  1. ///அலைநீளம்
    நிர்ணயிக்கிறது
    கடலின் பரப்பை
    அல்லது
    கரையின் பரப்பை///

    //கடலும்,
    கடலாகக்கூடும்
    கரையும் //

    :)

    சேரல் பார்வை

    ReplyDelete
  2. நல்லாயிருக்குங்க சேரல்....

    //கடலாகக்கூடும்
    கரையும் //

    அருமை.. அருமை...

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்கு..

    ReplyDelete
  4. கவிதை அழகு.. :-))

    ReplyDelete
  5. நல்லாருக்கு சேரல்

    ReplyDelete
  6. நெய்தல் கவிதை
    கவிதை நெய்தல்

    ReplyDelete