கடலற்ற
கடலினடியே
கடலின் கரையாகிறது
உள்ளங்கையோடும்
ரேகைகள் போலும்
ஒன்றுபோலிருப்பதில்லை
மாறி மாறி
எல்லை போடும் கடலலைகள்
அலைநீளம்
நிர்ணயிக்கிறது
கடலின் பரப்பை
அல்லது
கரையின் பரப்பை
ஒத்தத் தொலைவிருந்து
எல்லாம் ரசித்திருக்கும்
வானம் பார்த்துக் கிடக்கின்றன
கடலும்,
கடலாகக்கூடும்
கரையும்
///அலைநீளம்
ReplyDeleteநிர்ணயிக்கிறது
கடலின் பரப்பை
அல்லது
கரையின் பரப்பை///
//கடலும்,
கடலாகக்கூடும்
கரையும் //
:)
சேரல் பார்வை
நல்லாயிருக்குங்க சேரல்....
ReplyDelete//கடலாகக்கூடும்
கரையும் //
அருமை.. அருமை...
ரொம்ப நல்லா இருக்கு..
ReplyDeleteகவிதை அழகு.. :-))
ReplyDeleteஅருமை..
ReplyDelete:) Nandraaga irukkirathu Cheral!
ReplyDeleteநல்லாருக்கு சேரல்
ReplyDeleteநெய்தல் கவிதை
ReplyDeleteகவிதை நெய்தல்