புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Saturday, April 18, 2009

தொடரும் வார்த்தைகள்

சாமி கும்பிடேன்டா

சாப்பிடும்போது
புத்தகம் படிக்காதே

வீட்டுக்கு யாராவது வந்தா
வாங்கனு சொல்லுடா

நாலு விசேஷத்துக்குப்
போய் வந்தாதான்
வெளி மனுஷங்க
பழக்கம் வரும்

இந்த கிரிக்கெட் போட்டில
அப்படி என்னதான் இருக்கோ?
சோறு தண்ணி கூட எறங்காம

கால் ஆட்டினா
குடும்பத்துக்கு ஆகாதுடா

திட்டியபடியே இருந்தாலும்
மிகவும் பிடித்திருக்கிறது
அம்மாவையும்,
அவளின் வார்த்தைகளையும்

அதனால்தான்
அதன் படி நடப்பதேயில்லை

'போம்மா'
என்று அலட்சியம்
கொள்ளச் செய்கிறது
மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும் ஆசை!

13 comments:

ஆ.ஞானசேகரன் said...

//'போம்மா'
என்று அலட்சியம்
கொள்ளச் செய்கிறது
மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும் ஆசை! //

படு ஜோக்கா இருகே....

ஆ.சுதா said...

கவிதை படிப்பதற்கு ஒருவாராக இருந்தது.

'போம்மா'
என்று அலட்சியம்
கொள்ளச் செய்கிறது

இது மட்டுமே உண்மையாக இருக்கும்!

மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும் ஆசை!

இது பெரும்பான்மை உண்மையா இருக்காது. உங்களின் ஏக்கமா (அ) ஆசையா இருக்கலாம்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி நண்பர்களே!

இது முழுக்க முழுக்க என் சொந்த அனுபவத்தில் எழுதியதே. வெகு சில மனிதர்களுக்கு இந்த உணர்வு ஒத்தும் போகலாம்.

-ப்ரியமுடன்
சேரல்

ச.முத்துவேல் said...

எளிமையான, அழகான கவிதை. நல்லாயிருக்குது.

bhupesh said...

சமத்துப்பிள்ளை நான். பின்னோக்கிப்பார்த்தால், கொஞ்சம் சேரல் மாதிரி இருந்திருக்கலாம். அழகு!!

Anonymous said...

arumai cheral rasiththeen

mankuthiray

யாத்ரா said...

நானும் இம்மாதிரி உணர்ந்திருக்கிறேன், நன்றாயிருக்கிறது.

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

வணக்கம் தோழரே!

///திட்டியபடியே இருந்தாலும்
மிகவும் பிடித்திருக்கிறது
அம்மாவையும்,
அவளின் வார்த்தைகளையும்
அதனால்தான்
அதன் படி நடப்பதேயில்லை///

பிடித்தமானவர்கள் சொல்வதை கேட்பது இல்லை...உண்மை.

///கால் ஆட்டினா
குடும்பத்துக்கு ஆகாதுடா///

ஸ்பென்செரில் இருக்கும்பொழுது உங்களிடம் யாரோ சொன்னதாக ஞாபகம்...

அருமையாக இருக்கிறது...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@ச.முத்துவேல்
நன்றி நண்பரே!

@Bhupesh
நன்றி நண்பா! கடைசி வரியைத் தவிர மற்ற வரிகள் எல்லோருக்கும் கூடப் பொருந்தியிருக்கலாம்.

@mankuthiray
நன்றி நண்பரே!
என்ன அனானியாக வந்து கருத்திட்டிருக்கிறீர்கள்?

@yathra
நன்றி :) நீங்களும் என்னைப்போல் ஒருவரா?

@கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
நன்றி நண்பரே!

ஸ்பென்சரில் தோழி ஒருவர் சொன்னதாக ஞாபகம். அதன் பிறகும் நலம் விரும்பிகள் சொல்லி இப்போது விட்டொழித்துவிட்டேன் இப்பழக்கத்தை என்றே சொல்ல வேண்டும்.

-ப்ரியமுடன்
சேரல்

Pachai said...

konnuttea po..

பிரவின்ஸ்கா said...

"திட்டியபடியே இருந்தாலும்" அம்மாவின் பாசம்.

"போம்மா " என்ற வார்த்தைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் நேசத்தை உணர்கிறேன் .


மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும் ஆசை ...

ஆசையின் குணம்தானே ...

நன்றாக இருக்கிறது கவிதை.

Ramprabu said...

Seral,
It is very good. Everything match with me too! I really liked it.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@ Pachai
@ பிரவின்ஸ்கா
@ Ramprabu

நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்