Monday, January 02, 2012

உலகம்

சாளரத்தின் வெளியில்
நிறையும்  என்னுலகில்
பச்சை போர்த்திய வேம்பு மட்டும்

செவ்வகச் சட்டங்களுக்குள் புதையும்
ஓவிய மரத்தின் கால்கள்
எங்கு பாவியிருக்குமோ!

வானத்தை விடவும் பெரிதாகச்
சிறகு விரித்தாடுகிறது வேம்பு
கூடவே எங்கேனும் ஆடக்கூடும்
அதனோடு அதன் நிழலும்

காற்றுக்கு அசைந்தும்
பறவைக்கு வளைந்தும்
வெயிலுக்குத் தளர்ந்தும்
மழைக்கு நெகிழ்ந்தும் கொடுக்கும்
வேம்பின் உலகில் இருக்கலாம்
இன்னும் எதேதேனும்

என்னுலகில் வேம்பு மட்டுமென்பதில்
ஒன்றும் வெட்கமில்லை

அவரவர் உலகம்
அவரவர்க்கு.

3 comments:

  1. மிக நன்று! உறைந்த ஒரு காட்சியின் படிமத்தை, உன் சாளரக் கம்பிகள் போலவே நீயும் இந்தக் கவிதையால் சிறைப் பிடித்து விட்டாய் என்று உணர்கிறேன்.

    ReplyDelete
  2. தோழரே!
    வாழ்த்துகள்...உங்களால் மட்டுமே இப்படி எழுத முடியுமொவென்று சமயங்களில் தோன்றச் செய்து விடுகிறீர்கள்...நன்று...

    ReplyDelete
  3. அவரவர் உலகம்
    அவரவர்க்கு.
    உன்னதமான வரிகள் அருமை

    ReplyDelete