Tuesday, January 29, 2013

அடையாளம்

நான் என்பதாய்
அடையாளப்படுத்துகிறது குழந்தை

ஒரு நிழலை
ஒரு மரத்தை
ஒரு கேலிச்சித்திரத்தை
ஒரு நட்சத்திரத்தை
ஒரு கூண்டு மிருகத்தை
ஒரு பேரலையின் மிச்சத்தை

வளர்ந்தபின் அடையாளப்படுத்தும்
நான்களை விடவும்
உத்தமமாகவே இருந்து விடுகிறதது
எப்போதும்

4 comments:

  1. வளர்ந்தபின் அடையாளப்படுத்தும்
    நான்களை விடவும்
    உத்தமமாகவே இருந்து விடுகிறதது
    எப்போதும் //

    மிக மிக அருமை
    எளிமையாகச் சொல்லப்பட்ட ஆழமான சிந்தனை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. innocence is best??!! apdiya!! :D

    ReplyDelete