Tuesday, May 07, 2013

சிதைவுப் புள்ளி

நான்கு சாலைகள்
சந்திக்கும் புள்ளியில்
காத்திருக்கிறேன்

ஒரு குழந்தையின் எதிர்பார்ப்புடன்
கிடக்கிறது மனது

எத்திசையிலிருந்தும் வரக்கூடும்
என்னைச் சிதைக்கப் போகும்
விபத்தின் கணம்
காற்றைப் போல லேசாக....

1 comment:

  1. விபத்தின் கணம் திகைக்க வைக்கிறது...!

    ReplyDelete