புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, January 22, 2010

ஞானம்

ஈரமேறிப்போன
மார்கழியிரவொன்றில்
வெதுவெதுப்புக்காகத்
தேர்ந்திருக்கலாம்
மாடிப்படிகளை

எதிர்பாராத
என் வருகையில்
வெடுக்கென்று பிடுங்கிய
தூக்கத்தின் மிச்சத்தைத்
தூக்கிச்செல்கிறதொரு நாய்
மருட்சியுடன்

இருளைத் துளைத்து
நிகழ்ந்திருக்க வேண்டாம்
இப்பின்னிரவிலென் வருகை

10 comments:

Vidhoosh said...

ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி எழுத்தப் பார்த்து.

நல்லாருக்குங்க.

மாதவராஜ் said...

நல்ல கவிதை.

மனிதர்கள் எத்தனை பேரை நம் வருகை தொந்தரவு செய்கிறது! இப்படி நிறைய யோசிக்க வைத்தது....

Ashok D said...

:) நல்லாயிருக்குங்க

ஜெனோவா said...

மிகவும் பிடித்திருந்தது இந்த கவிதை ..
வாழ்த்துக்கள் சேரல்

நேசமித்ரன் said...

நல்லாருக்குங்க.

நந்தாகுமாரன் said...

//

எதிர்பாராத
என் வருகையில்
வெடுக்கென்று பிடுங்கிய
தூக்கத்தின் மிச்சத்தைத்
தூக்கிச்செல்கிறதொரு நாய்
மருட்சியுடன்

//

இந்த வரிகள் மட்டும் பிடித்திருக்கின்றன

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு சேரல் கவிதை.

என்ன சேரல் அடிக்கடி பார்க்க முடியலை...வேலைப் பளுவா?

ச.முத்துவேல் said...

நல்லாயிருக்கு சேரல், கல்யாண்ஜி கவிதை படிச்ச மாதிரி.

J S Gnanasekar said...

இதுக்குத்தான் வெளக்கு வெச்சப்பறம் கடன் வாங்கக் கூடாதுன்னு பெரியவங்க சொன்னாங்க.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி நண்பர்களே!

அன்பு பா.ரா....வேலைப்பளு தான். ஆனால் அலுவலக வேலைகள் இல்லை. சொந்த வேலைகள். வாழ்க்கையில் சில சுபமான மாற்றங்கள். அதுதான் :)

முத்துவேல்,
கல்யாண்ஜி மாதிரி என்றதும் மகிழ்ச்சி தான்....ஆனால், அந்த முனைப்பு எதுவும் எழுதும்போது இல்லை :)

-ப்ரியமுடன்
சேரல்