புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, July 30, 2010

கதைகள் கனவுகளை உமிழும்

மிகையதார்த்தம் பேசும்
கதைசொல்லியொருவனின் பிணம் மிதந்து வரும்
புராண நதிக்கரையில் காத்திருக்கிறேன்

வந்துசேரும் பிணத்தில் ஒளிந்திருக்கின்றன
வெகுகாலமாய் நான் தேடிச் சோர்ந்திருந்த
மிகையதார்த்தக் கதைகள்

கதைகளின் அரையுறக்கம் சேர்ந்த
தலைகளைத் தூக்கிப்பிடித்து
தோளில் இருத்தி நடக்கத் தொடங்குகிறேன்

கதைகள் உமிழ்ந்தபடி
வருகின்றன
வழியெங்கும் என் கனவுகளை

6 comments:

ஆதவா said...

மிக நன்றாக இருக்கீறது சேரல்.
கற்பனித்து உணர முடிகிறது.

sakthi said...

வந்துசேரும் பிணத்தில் ஒளிந்திருக்கின்றன
வெகுகாலமாய் நான் தேடிச் சோர்ந்திருந்த
மிகையதார்த்தக் கதைகள்

அருமை சேரல்

தேடல்!!!

நேசமித்ரன் said...

நன்றாக இருக்கறது சேரல்

kartin said...

யோசிக்க வைக்கிறது சேரல்!
அப்புறம்...new template-ஐ கொஞ்சம் செதுக்கலாமோ?!

சேரல் said...

நன்றி நண்பர்களே!

@kartin,
வடிவமைப்பு தெளிவாக இல்லையா? நிறத்தை மாற்றவேண்டும் என்கிறீர்களா?

-ப்ரியமுடன்
சேரல்

ஆறுமுகம் முருகேசன் said...

!!!

ரொம்ப ரொம்ப ரொம்ப...
நல்லா இருக்கு..