புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, September 21, 2010

வெறும் காற்று

எங்கிருந்து கொண்டுவந்து தள்ளுகிறது
இவ்வளவு காற்றை
இந்த மின்விசிறி?

காற்று வெறும் காற்றாக மட்டுமே
இல்லாதிருப்பதுதான் ஆச்சரியம்

மௌனம் முற்றிலும்
சபிக்கப்பட்ட நாட்களில்
பேசிக்கொண்டேயிருக்கிறது மின்விசிறி
ஓயாமல்

நெருப்பிலான பெரும்போர்வையொன்றை
விரித்துப்போர்த்தியது போலும்
வெய்யில் நிறைந்த இந்நகரின்
புழுக்கமடர்ந்த மதியப்பொழுதுகளில்
சுற்றிச் சுற்றிச் சலித்துப்
பெருமூச்சில் அயர்கிறது

மின்சாரமறுந்த வேறொரு நாளில்
சவமெனச் சமைகிறது
பேச்சும் மூச்சுமற்று

3 comments:

Unknown said...

/காற்று வெறும் காற்றாக மட்டுமே
இல்லாதிருப்பதுதான் ஆச்சரியம்/

விளக்குங்க சேரல்.
புரியல.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அதனை அடுத்துள்ள மூன்று வரிகளும் இவ்வரியின் பொருளைப் பூடகமாக உணர்த்துவதாக நான் உணர்கிறேன் நண்பரே!


-ப்ரியமுடன்
சேரல்

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்கு சேரல்