புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, July 05, 2006

இது என்ன காதல்....?

இன்றோடு
என்னைப்பிரிகிறாய் நீ!

உன்
தனிமையில்
துணையாய் வந்தவன்
தானே நான்!

நம் மூச்சுக்காற்றைப்
பரிமாறிக் கொண்ட கணங்களில்
என் உயிரின் நீளம்
அதிகரிப்பதை
உணர்ந்திருக்கிறேனே
நான்!

நீ முத்தமிட்டனுப்பிய
காற்றை
நுரையீரலில்
நிரைத்துக் கொண்டு
திரிந்தேனே!

உன் செல்லத் தூறலில்
நனைவதற்காக
மழை விட்டபொழுதுகள் வேண்டி
அலைந்தவன் தானே நான்!

எல்லோருக்கும் தெரிந்து தானே
வளர்ந்தது நம் உறவு?

இன்றோடு என்னிலிருந்து
பிரிக்கப்படுகிறாய் நீ!

அது சரி,

கட்டுபவனைப் போல
வெட்டுபவனுக்கும்
புரிவதில்லை
ஒரு முன்னாள் காதலனின் சோகம்!

14 comments:

J S Gnanasekar said...

என்ன, வீட்டுக்குப் பின்னால் இருக்கும் புளியமரத்தின் மீதோ, இல்லை வேப்பமரத்தின் மீதோ காதலோ?

எனது சிற்றறிவுக்கு எட்டிய வரை, சத்தியமாக இவ்வளவுதான் புரிந்தது.

-ஞானசேகர்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

இதில் புரியாமல் போவதற்கு வேறொன்றுமில்லை.

த.அகிலன் said...

/கட்டுபவனைப் போல
வெட்டுபவனுக்கும்
புரிவதில்லை
ஒரு முன்னாள் காதலனின் சோகம்/
என் வலைப்பூவிற்கு வருகை தந்தவரைப் பார்க்கலாம் என்று தான் வந்தேன் ஆனால் இந்த வரிகள் பிடிச்சுசுப்பொச்சு சார்

அன்புடன்
த.அகிலன்

J S Gnanasekar said...

அப்ப புரிஞ்சுக்கிட்டேனா?

-ஞானசேகர்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

முழுதும் புரிந்திருந்தால், முழுதும் சந்தோஷமே!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி அகிலன்!

MaYa said...

மரம் மீதான காதல்..!!
கூடலின் சுகத்தொடு
பிரிவின் ஊடல்..!! உன்னதம்..!!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி நண்பரே!

கதிர் said...

"கட்டுபவனைப் போல
வெட்டுபவனுக்கும்
புரிவதில்லை"

எவ்வளவு பெரிய தத்துவம்.

உங்கள் பெயரை போலவே கவிதையும் அருமை.

தொடர்ந்து கலக்குங்க

அன்புடன்
தம்பி

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி தம்பி!(உண்மையில் நீங்கள் எனக்கு அண்ணன் தான்)

தொடர்ந்து வாருங்கள்

ப்ரியமுடன்,
சேரல்.

கதிர் said...

"நன்றி தம்பி!(உண்மையில் நீங்கள் எனக்கு அண்ணன் தான்)"

இதெல்லாம் யார் கேட்டது இப்போ?

இன்னும் சின்னபிள்ளைத்தனமாவே இருக்கறிங்களே.

அன்புடன்
தம்பி

premkalvettu said...

எவனோ எப்பவோ வெட்டிட்டு போயிட்டான்
சரி என்ன பன்றது இருக்கிறதையாவது வெட்டாம பாத்துக்க

premkalvettu said...

எவனோ எப்பவோ வெட்டிட்டு போயிட்டான்
சரி என்ன பன்றது இருக்கிறதையாவது வெட்டாம பாத்துக்க

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கருத்துக்கு நன்றி கல்வெட்டு நண்பரே!

ப்ரியமுடன்,
சேரல்.