புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, January 07, 2010

மீள் சிறகுகள்

வேறு கவனமெதையும்
மிகக்கவனமாகத் தவிர்த்த
ஓய்வுகளற்ற
நெடியவிரு பயணங்களினூடே
எதேச்சையாக எனும்படியாகத்தான்
எதிர்ப்பட்டுக்கொண்டோம்
ஒரு பறவையும்
நானும்

வளையலகு கொண்டதொரு
பறவையின் சிறகுகளும்,
விரிந்த கண்களுடைய
யாத்ரீகனொருவனின்
கால்விரல்களும்,
பிறிதொரு நாள்
வந்தமர்ந்து
இளைப்பாறக்கூடும்
இருவேறு பயணக்குறிப்புகளில்

-சேரல்

உரையாடல் கவிதைப்போட்டிக்காக.....

போட்டிக்கான எல்லாக் கவிதைகளும் இங்கே....

26 comments:

Bee'morgan said...

வாழ்த்துகள் சேரா :)

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..

பா.ராஜாராம் said...

அருமையான கவிதை சேரல்.கண்டிப்பா ஜெயிக்கும்.ஜெயிக்கணும்..

வாழ்த்துக்கள் சேரல்!

Unknown said...

அருமையான கவிதை.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.. :)

மண்குதிரை said...

ரொம்ப நல்லா இருக்கு சேரல்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@Bee'morgan
நன்றி பாலா... :)

@முனைவர்.இரா.குணசீலன்
நன்றி நண்பரே!

@பா.ராஜாராம்
நன்றி பா.ரா..... உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் :)

@ஆறுமுகம் முருகேசன்
நன்றி நண்பரே!

@மண்குதிரை
நன்றி தோழா!

-ப்ரியமுடன்
சேரல்

Gowripriya said...

மிக அருமை.. வெற்றி பெற வாழ்த்துகள்

Vidhoosh said...

ரொம்ப நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள்.

வித்யா

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் வெற்றி பெற வாழ்த்துகள்

நல்லா இருக்குங்க

பாலா said...

அருமை நண்பரே
நிச்சயம் ஜெயிக்க வேண்டும் வாழ்த்துகிறேன்
நண்பா

கமலேஷ் said...

மிக அழகாக இருக்கிறது...கண்டிப்பாக வெற்றி பெரும்...வாழ்த்துக்கள்...

ஜெனோவா said...

யாத்ரீகனின் கால் விரல்களை சந்திக்க ஆவலாய் ...
மிக அருமை சேரல்

வெற்றி பெற வாழ்த்துக்கள்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@Gowripriya,
@Vidhoosh
@நேசமித்ரன்,
@பாலா,
@கமலேஷ்,
@ஜெனோவா

நன்றி நண்பர்களே! :)

-ப்ரியமுடன்
சேரல்

ரெஜோ said...

அருமை :-) வாழ்த்துகள் அண்ணா ..
ஐயோ சொக்கா .. எனக்கில்லே .. எனக்கில்லே .. ;-)

Balakumar Vijayaraman said...

மென்மனம் கொண்ட பார்வை.

யாத்ரீகனின் குறிப்பு அழகு. பறவையின் பதிப்பு வந்தவுடன் சொல்லுங்க :)

வாழ்த்துகள் சேரல்.

அவனி அரவிந்தன் said...

அருமையான கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப நல்லாருக்கு சேரல்.. வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@ரெஜோ
பெருஞ்சிரிப்பு....உன்னைத் தெரியும் தம்பி...... :)

@பாலகுமார்
புன்னகை....நன்றி :)

@அவனி அரவிந்தன்
@உழவன்
@S.A. நவாஸுதீன்

நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்

Sebastin said...

Thala "Puthiya Paravai" yaa,

Vazhthukkal

இராவணன் said...

அழகு சேரல். வாழ்த்துக்கள்

Sakthi said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

Nila Loganathan said...

அருமையான கவிதை.

கவிதையுடன் ஒன்றிப் போக வைக்கிற வார்த்தைகள்........

Aravindan said...

அருமை. வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.

நந்தாகுமாரன் said...

கவிதை பிடித்திருக்கிறது ... வெற்றி பெற வாழ்த்துகள் ... எவ்வளவு தாமதமாக இதை நான் வாசித்திருக்கிறேன்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்