எப்போதும் அதிகாலையில் அரைத்தூக்கத்தில் எழுகையில் திறந்திருக்கும் குளியலறைக் கதவு, திடீரென்று ஒரு நாள் உட்புறமாக தாளிட்டிருக்கையில் தான் அழுத்தமாக நினைவுக்கு வந்தது தனக்குத் திருமணமானது என்பதாக நண்பனொருவன் சொன்னான். கேட்கும்போது வேடிக்கையாக இருந்தது. அதே போல வேறு சில சந்தர்ப்பங்களை இந்த ஒரு மாதமாக உணர நேர்ந்தது.
திருமண ஏற்பாடுகள் தொடங்கிய நாளில் இருந்தே இந்த இடைவேளையை நானே உருவாக்கிக் கொண்டேன். வாசிப்பிலிருந்தும், பதிவிடுவதிலிருந்தும், பொதுவாகச் சொல்வதென்றால் எதையும் எழுதுவதிலிருந்தும் நானாக எடுத்துக்கொண்ட இந்த இடைவேளை வாழ்க்கையின் சில மாறுதல்களை பூரணமாக நுகர ஏதுவாயிருந்தது. அலுவலகத்திலிருந்து பதினைந்து நாட்கள் விலகி இருந்ததும் கூட நன்றாகவே இருந்தது. நன்றாகத்தானே இருக்கும் :)
இடைவேளைகள் தேவையாய் இருக்கின்றன; புத்துணர்வளிக்கின்றன; ஓய்வோடு, சாவகாசமாய்த் தன்னாய்வு செய்து கொள்ளச் சமயமளிக்கின்றன. இதோ இப்படி சில வார்த்தைகள் எழுதவும் வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கின்றன.
இடைவேளை எனும்போதே அடுத்த பகுதி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அடுத்த பகுதிக்காகத் தயாராகிறேன்.
-ப்ரியமுடன்
சேரல்
11 comments:
உங்களுக்கான வாழ்த்தை அன்று சொற்கப்பல் சந்திப்பில் முத்து-விடம் கொடுத்தேன். பெற்றுக்கொள்ளவும் :))
வாழ்த்துகள். புத்துணர்ச்சியோடு வாருங்கள். :)
Wish you a happy married life Seral
வாழ்த்துகள் சேரல்! இது ஒரு வினோத பருவம்
நிரம்பிய மௌனம்
ஆனால் ஒட்டகத்தின் நீர் வயிறு போல வருடங்களுக்கு வைத்துப் பருக...
ஆமாமா.. நல்லாதான் இருக்கும்! :)
:-)
வாழ்த்துக்கள் சேரல்!
இடைவேளை இனியவேளை... வாழ்த்துக்கள் அன்பரே...
இருமனம்
எம்மனம்
என்மனம்
எனத்தடுமாறும் கணம்
உன் மனம் காணட்டும்..
வாழ்த்துக்கள் சேரல்.
வாழ்த்துக்கள் சேரல்... :)
Congrats!!
nice blog!
vaazhthukal!
Post a Comment