உடலைச் சதுரமாக்கி
உள்நுழையும் காற்றுக்கெனத்
திறந்திருந்த
சாளரத்தின் வழி புகுந்து
படர்கிறது சிகரெட் புகை
அது,
பின்னிரவின் அமைதியின்
பிடியில் சிக்குண்டு
தூக்கமற்று அழும்
எவனோ ஒருவனின்
மன இடுக்குகளில் நுழைந்து
சாந்தப்படுத்துகிறது
மூச்சுத்திணறத்திணற
விழித்தெழுந்து
வியர்க்கிறேன்
தூக்கமற்ற வெளியில்
மிதந்து போய்
இன்னொரு சிகரெட்
பற்றவைக்கிறான் அவன்
தொற்றுநோயெனப்
பற்றிவிட்ட விழிப்பின் பிடியில்
எப்படிக் கழிப்பதென்ற
திட்டமிடலிலேயே
கழிக்கிறேன்
என் மீதியிரவை
9 comments:
நல்லா இருக்கு சேரல்
nalla iruku seral.. :)
மொழி அருமையாக இருக்கிறது ... ஆனால் பாடுபொருள் பாடித்தீர்த்த விஷயமாதலால் என்னவோ அவ்வளவு கவரவில்லை ...
i can see feel that. but i wake up due to summer and it is hard to go back to sleep again. :-)
அருமையா இருக்கு சேரல்
!!!
அருமை சேரல்!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
//தொற்றுநோயெனப்
பற்றிவிட்ட விழிப்பின் பிடியில் //
சிகரெட்ட விட்டா இந்த தொற்றுநோய் வராதுங்க... என்ன நாஞ்சொல்லுறது...
கவிதை மிக அருமை....
செமையா இருக்கு..
Post a Comment