புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, June 11, 2010

என்றாலும்

அதை அறிந்து கொண்டதில்
உனக்குண்டான மகிழ்ச்சி
அலாதியானது

அதைப் பற்றி என்னிடம்
சொல்லத் தொடங்குகிறாய்
ஒரு சிட்டுக்குருவியின்
காலைநேரப் பரபரப்புடன்

அதல்லதென்று நிரூபிப்பதில்
எனக்கொன்றும் ஆவதில்லை

அது
இன்னதென்று நானும்
தீர்மானமாய் அறியவில்லை

என்றாலும் நிறுவுகிறேன்
அதுவும், நீயும் தவறென்பதை

இது எப்போதும் நடக்கிறது
இயல்பாக...
மிக இயல்பாக....

பின் நீ
சிறகுகள் பிய்ந்து
மரித்துப்போன
சிட்டுக்குருவியொன்றின் சடலத்தை
நானறியாமல் புதைக்கும்
முனைப்பிலிருக்கிறாய்,
வெகு சிரத்தையுடன்

13 comments:

பா.ராஜாராம் said...

அற்புதம் சேரல்!

VELU.G said...

அருமை நண்பரே

நேசமித்ரன் said...

//சிறகுகள் பிய்ந்து
மரித்துப்போன
சிட்டுக்குருவியொன்றின் சடலத்தை
நானறியாமல் புதைக்கும்//
முனைப்பிலிருக்கிறாய்

அருமை சேரல் !

சேரல் said...

பா.ரா, VELU.G, நேசமித்ரன்,

மிக்க நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

ஆறுமுகம் முருகேசன் said...

மிக அருமை நண்பா..!!

Nundhaa said...

நல்லாயிருக்கு சேரல்

ஸ்ரீவி சிவா said...

மிக நன்றாய் இருக்கிறது சேரல்.. இதே போன்று ஏதேனும் சிட்டுக் குருவியை கொன்றிருக்கிறேனா எனத் தெரியாமல் வருத்தம் மேலிடுகிறது.

செல்வராஜ் ஜெகதீசன் said...

நல்லாயிருக்கு சேரல்.

சி. கருணாகரசு said...

நல்லாயிருக்குங்க.
பாராட்டுக்கள்.

கமலேஷ் said...

அருமையா இருக்குங்க

தேவன் மாயம் said...

வார்த்தைகளில் வடிக்க முடியாத உணர்வுகளை வரிகளில் கொட்டியுள்ளீர்!!

மாதவராஜ் said...

சேரல்!

கவிதை பேசும் விஷயம் மிக முக்கியமானது. நவீன வாழ்வின் சிக்கல்களில் இதுவும் ஒன்று. இப்படி நாம் எத்தனை சிட்டுக் குருவிகளை கொன்றும், புதைதும் ஓடிக்கொண்டு இருக்கிறோம். சமீபத்தில் நான் படித்த சிறப்பான கவிதை இது.

சேரல் said...

ஆறுமுகம் முருகேசன்,
Nundhaa,
ஸ்ரீவி சிவா,
செல்வராஜ் ஜெகதீசன்,
சி. கருணாகரசு,
கமலேஷ்,
தேவன் மாயம்,
மாதவராஜ்,

கருத்துக்கு மிக்க நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்