புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, July 08, 2010

நிலாச்சோறு

எல்லாத் தாய்களுக்கும்
கிடைத்துவிடுகிறதொரு நிலவு
தம்பிள்ளைக்குப் பறித்துக் கொடுத்து
உணவூட்ட

எல்லாக் குழந்தைகளும்
பத்திரப்படுத்துகிறார்கள்
தங்களுக்கென
தனியொரு நிலவை

எல்லா நிலவுகளும்
ஒன்றாகும் பொழுதில்
தொலைந்தே போகின்றன
எல்லா நிலவுகளும்,
எல்லாக் குழந்தைகளும்

11 comments:

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு சேரல்!

sakthi said...

எல்லாக் குழந்தைகளும்
பத்திரப்படுத்துகிறார்கள்
தங்களுக்கென
தனியொரு நிலவை

சேரல் இவ் வரிகள் எத்தனையோ அர்த்தங்களை தருகின்றது

ஈரோடு கதிர் said...

அருமை சேரல்

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

க.பாலாசி said...

நல்லாயிருக்குங்க சேரல்...

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

அருமை சேரல்

Mohan said...

ரொம்ப நல்லாயிருந்ததுங்க!

ச.முத்துவேல் said...

ஆமாம். குழந்தைமை தொலையற, இழக்கிற இடம்.ரொம்ப நல்லா வந்துருக்கு

Unknown said...

ஆஹா.. உங்க கவிதயைப் படிக்கும்போது உள்ளுக்குள்ள என்னவோ பண்ணுது நண்பர் எப்பவுமே.!
:)

Unknown said...

Good one Cheral.

Sabarinathan Arthanari said...

வித்தியாசமான கவிதை. நன்று.

நன்றி