புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, January 07, 2011

புத்தகக் கண்காட்சி

கிராமியப் பண்பாடு, வாழ்க்கை முறை, சடங்குகள், வெவ்வேறு ஊர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் பழங்குடி இனத்தவரின் வாழ்க்கை இவற்றைப் பதிவு செய்யும் புத்தகங்களை இந்த வருடப் புத்தகக் கண்காட்சியில் வாங்குவதாய் உத்தேசம். நானே முயன்றும், நண்பர்களின் உதவியுடனும் சில புத்தகங்களை அடையாளம் கண்டிருக்கிறேன். இந்த வகையைச் சேர்ந்த புத்தகங்கள் உங்களுக்குத் தெரிந்தால் தெரிவித்து உதவவும். புனைவல்லாத புத்தகங்களாக இருத்தல் மிக விருப்பம். நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

2 comments:

நாளைப்போவான் said...

முடிந்தால் கள்ளிகாட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் படியுங்கள் (ஒரு வேளை நீங்கள் இது வரை படிக்காமல் இருந்தால்!) செம்மண் கரடுகளின் கலாச்சாரங்களையும், அவற்றில் இழையோடுகிற உயிர்ப்பையும் சொல்கிற நாவல்கள் இவையிரண்டும்!

சேரல் said...

நன்றி நண்பரே! இவ்விரு புத்தகங்களையும் நான் ஏற்கனவே வாசித்திருக்கிறேன்.

நீங்கள் சொல்வதைப் போலவே மிகச் சிறப்பான நூல்கள் இவை.

-ப்ரியமுடன்
சேரல்