புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Sunday, December 25, 2011

ஒரு சலூன் கடையும், சில உதிரி முடிகளும்

சவரக்கத்தி
கழுத்தில் அழுந்தும்போது
புலனாகின்றன
வாழ்வின் மீதான பிடிப்பும்
சக மனிதனின் மீதான நம்பிக்கையும்
-----------------------------
அழகான பெண்களும்
அவ்வப்போது வருகிறார்கள்
ஆடைகளை அவிழ்த்துவிட்டு
சுவரோடு ஒட்டிக்கொள்கிறார்கள்
----------------------------
அந்த மூன்றெழுத்து நாயகியின்
அந்தரங்கக் காதலன் பற்றிய
இரண்டாவது குறிப்பில்
இருக்கும்போதுதான்
காலியாக வேண்டுமா
சவர நாற்காலி?
----------------------------
வேறுமாதிரி இருந்தார்கள்
முடிதிருத்தியபின்
நேருக்குநேர் பதித்திருந்த
கண்ணாடிகளின்
உள்ளே உள்ளே
அமர்ந்திருந்த
'நான்'கள்
---------------------------
எப்போதுமே சாதாரணமாக
வந்து விழுகிறது கேள்வியொன்று
மீடியமா? ஷார்ட்டா?
முடிந்த பின் எதுவாகவுமில்லாமல்
என் விருப்பம் போலுமில்லாமல்
அமைகிறது ஏதோ ஒன்றாக
----------------------------
அந்தப் பாடலின் காட்சி
எனக்கு மிகப்பிடிக்கும்
இன்று தான் கவனித்தேன்
அதன் பாடல் வரிகளை
----------------------------
கண்கள் மூடி
ராட்டினமாடிப்
பின் மெல்லக் கலைகிறது
குட்டித் தியானம்

8 comments:

bhupesh said...

அருமை நண்பா!, அருமை! நண்பா.

Rathnavel said...

அருமை.

Subi said...

>>அந்தப் பாடலின் காட்சி
>>எனக்கு மிகப்பிடிக்கும்
>>இன்று தான் கவனித்தேன்
>>அதன் பாடல் வரிகளை

காட்சி நன்றாக இருந்தால் சேரலுக்கும் 'அடி' சறுக்கும் போல...

முன் தேதியிட்ட பத்திரிகை ஆனாலும் கிசு கிசு படிப்பது "too much" நண்பா :)

ஈரோடு கதிர் said...

மிக அருமை சேரல்!

J.S.ஞானசேகர் said...

இரண்டாவது குறிப்பை முழுதும் படித்தீர்களா இல்லையா?

விட்ட குறை, தொட்ட குறை!

சித்திரவீதிக்காரன் said...

சலூன் கவிதைகள் மிகவும் அருமை. கண்ணாடிக்குள் உள்ளே உள்ளே இருக்கும் நான்'கள் என்ற வரி அருமை. பகிர்விற்கு நன்றி.

k n vijaya kumar said...

very nice.

k n vijaya kumar said...

very nice