புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, January 01, 2020

விளக்கு

பின்னிரவில் அப்பிக்கிடக்கும்
மாயிருளுக்குள் புதைந்திருக்கிறது
புது வருடத்தின்
ஒவ்வொரு கணமும்

நமக்கென நாமே
செய்துகொண்ட விளக்கு
இருளைத் தின்றழித்துக்
கட்புலனாக்கிவிடும்
நகரும் நாட்களில்

நானும் நீயும்,
காண்பதும் மறைவதும்,
ஒன்றாகவும் வெவ்வேறாகவும்,
தொடர்கிறது விளையாட்டு

ஒளிவதும் தெரிவதும்
ஒவ்வொரு விளக்கின்
ஒளிநீளம் பொறுத்தது
என்பதுதானே சூட்சுமம்

சுமக்கும் கைகளே
செய்வதும் ஆகையால்
இன்றேனும் வாய்க்கக்கூடும்
எல்லாம் காட்டும்
நந்தா விளக்கு 

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

புத்தாண்டில் நல்லதொரு கவிதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு. வாழ்த்துகள். தொடரட்டும் பதிவுகள்.