நெரிசலுக்கிடையே
நான்நீண்ட நேரமாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கும் பெண்
எதேச்சையாய்
என் முகம் பார்த்துவிடுவாளோ?
காலியாய் இருக்கும்
பக்கத்து சீட்டில்
குடிகாரன் எவனும்
உட்கார்ந்து விடுவானோ?
கூட்டமாய் மாதர்கள்
நிற்கும் நிறுத்தத்தில்
என்னை அறியாமல்
இறங்கிவிடுவேனோ?
அடிக்கடி வந்து போகும்,
சில நொடி தூக்கத்தில்
சில்லறை பாக்கி
மறந்து போவேனோ?
பயத்தினூடே
ரசிக்கப்படாமலேயே கழிகிறது
ஒவ்வொரு பேருந்துப் பயணமும்...
-----------------------------------
சுகுணா திவாகரின் "தீட்டுப்பட்ட நிலா" படித்தபின்,
அவரைப் போலவே முயற்சி செய்து.... சூடுபட்டுக் கொண்டேன்.
************************************
இதன் "மூலம்" அறிந்த நண்பர்களுக்கு.....
நான் எழுதியதை அப்படியே வெளியிடும் தைரியம் இன்னும் வரவில்லை.
4 comments:
பின்னோக்கி ஓடும் மரங்கள்,
எதிர் இருக்கை இளமை,
எனக்கு மட்டும் புன்னகை வீசும்
பச்சிளம் குழந்தை,
கைப் பிடிக்கப் போகிறவள்
கைகளுக்கு அருகில்
எதையுமே ரசிக்கமுடியவில்லை
சில்லறைபாக்கி!
-யாரோ
suppppppppppper upppppppppppppo
சரிதான்..
எங்கேயோ பார்த்த முகம்..!!
எங்கேயோ பழகிய முக"வரி"கள்..!!
என்பதாய் உள்ளேயொரு தூண்டல்..!!
ஞானசேகர் சொன்ன வரிகளைச் சொல்லுகிறாயா?
Post a Comment