புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, July 04, 2006

குழூஉக்குறி

அப்போதெல்லாம்
யாரையும் பெயர் வைத்து
அழைத்ததாய் ஞாபகம் இல்லை

ராமாயணக்கதை கேட்டதிலிருந்து
சூர்ப்பனையாகிப் போயிருந்தான்
வெங்கடேசன்

கோடை காலம் வந்தாலே
பாட்டி வீட்டில் அடைக்கலம் சேரும்
வேணுவுக்குக்
குள்ளப்பாண்டி என்று பெயர்
வைத்ததாய் ஞாபகம்

இப்படித்தான்....
நடுவிரல் சித்தப்பா
சுடுதண்ணி சுப்பு
தவக்களை

இன்னும் கூட
இப்படியேதான்
இருந்திருப்பேன்,

கல்லூரி காலத்தில்
"கரி"
என்பது
எனக்கான
குழூ உக்குறியாய்
இல்லாதிருந்தால்...

5 comments:

கதிர் said...

ஏங்க இதுக்கெல்லாம் வருத்தப்படுறிங்க,
கலர்ல என்னவா இருந்தா என்ன, மனசு வெள்ளையா இருந்தா அது போதும்.

நிறப்பாகுபாடு பாக்கறவங்களை பாத்து தன்னம்பிக்க்கையோடு ஒரு புன்னகையை
உதிருங்கள் அதுவே அவர்களுக்கு தண்டனை போல

அன்புடன்
தம்பி

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி தம்பி!

இது என்னுடைய நேரடி அனுபவம் இல்லை என்றாலும், மனதைப் பாதித்த ஒரு நிகழ்வின் வெளிப்பாடு தான்!

பிறரைப் புண்படுத்துவதை எவ்வளவு எளிதாகச் செய்து விடுகிறோம்?

அறிவுரை சொல்வது நோக்கமில்லை.... ஆதங்கத்தைப் புரிந்து கொண்டவர்கள் யோசிப்பார்களானால் நிச்சயமாக மகிழ்ச்சி கொள்வேன்.

ப்ரியமுடன்,
சேரல்.

கதிர் said...

சேரல்,

"பிறரைப் புண்படுத்துவதை எவ்வளவு எளிதாகச் செய்து விடுகிறோம்?"

என்னை அறியாமல் பிறர் மனதை புண்படுத்தும்போது பயங்கரமான சூறாவளிக்காற்றில் தனியாக சிக்கிகொண்டது போலவே உணர்கிறேன். அதற்கு தண்டனை ஏதுமில்லையென்றாலும்.

அன்புடன்
தம்பி

Anonymous said...

dear cheral what a nice lines
iam really happy, this lines are touch my heart coz i fall in love
by
apprext

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி apprext!

-ப்ரியமுடன்
சேரல்